வெயில் Twitter
இந்தியா

Morning News Today : அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு; சென்னையில் 100 டிகிரி வெயில்

NewsSense Editorial Team

அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அசானி புயல், வெப்ப சலனம் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் முதல் 2 வாரங்களுக்கு வெப்பம் தணிந்தே காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. மே 24-ம் தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று காலை 102.38 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 100.94 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருக்கிறது. இன்று அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Modi

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் செல்லவிருக்கிறார். குஜராத்தில், பல்வேறு நலத்திட்டங்களைத் திறந்து வைக்கவுள்ளார். இன்று காலை ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கிற மாது ஸ்ரீ கேடிபி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். மேலும், பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் தலைவர்கள் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றுகிறார். பிரதமருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குஜராத் செல்கிறார். மேலும், கலோலில் ரூ.175 கோடி செலவில் இஃப்கோ நிறுவனத்தால் கட்டப்பட்ட நானோ யூரியா தொழிற்சாலையையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

கருணாநிதி

கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி!

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று சென்னையில் நடக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவச்சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள விழாவில் திருவுருவச்சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்துவைக்கிறார். இதனைத்தொடர்ந்து, கலைவாணர் அரங்கில் நடைபெறும், விழாவில் வெங்கையா நாயுடு, மு.க.ஸ்டாலின் இருவரும் உரையாற்றவுள்ளனர்.

இந்த சாலாவும் கப் போச்சே - துயரத்தில் RCB ரசிகர்கள்; வெளுத்தெடுத்த பட்லர்

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்

நேற்று நடை பற்ற ஐ.பி.எல் போட்டியில், ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?