Chat GPT: UPSC தேர்வில் பெயிலான சாட் பாட் - என்ன காரணம்? twitter
இந்தியா

Chat GPT: UPSC தேர்வில் பெயிலான AI தொழில்நுட்பம் - என்ன காரணம்?

Keerthanaa R

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட் ஜிபிடி முதல்நிலை யூபிஎஸ்சி தேர்வில் தோற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபகாலமாக அனைவரது பேச்சுகளிலும் இருப்பது சாட் ஜிபிடி. சாட் பாட் ஆன இதனை வைத்து குறுஞ்செய்திகள் முதல் ஈமெயில்கள், காதலர்களுக்கு லவ் லெட்டர்கள் வரை நம் ஆட்கள் எழுத பயன்படுத்தினர்.

நாம் கொடுக்கும் தகவலை உள்வாங்கிக்கொண்டு எளிமையான மொழியில் வார்த்தைகளாக கோர்த்து நமக்கான விடையை கொடுக்கும் இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்.

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலமாக இது இருக்கும் என வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி தேர்வில் பெயிலாகி இருக்கிறது சாட் ஜிபிடி!

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (Union Public Service Commission) என்பது இந்தியாவின் மிக கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். இந்திய அரசு பணியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வில் அவ்வளவு எளிதாக யாரும் தேர்ச்சிப்பெற்றுவிடுவது கிடையாது.

இப்படியிருக்க, சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனலிடிக்ஸ் இந்தியா மேகசின் என்கிற நிறுவனம் 2022 ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி தேர்வினை எதிர்கொண்டது.

முதல்நிலை தேர்வுக்கான வினாத்தாளில் புவியியல், பொருளாதாரம், வரலாறு, ஈகாலஜி, அறிவியல், அரசியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

கேட்கப்பட்டிருந்த 100 கேள்விகளில் வெறும் 54 கேள்விகளுக்கு மட்டுமே சாட் ஜிபிடி சரியான விடையளித்திருக்கிறது

2021 ஆம் ஆண்டு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கட் ஆப் மதிப்பெண் 87.54 சதவிகிதத்தை சாட் ஜிபிடி எட்டவில்லை. மேலும், யுபிஎஸ்சியின் முதல் நிலை தேர்வில் தேர்ச்சிப்பெற்று விடுமா என சாட் ஜிபிடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும் அந்த தொழில்நுட்பம் முறையாக பதிலளிக்கவில்லை.

”ஒரு செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியாக, யுபிஎஸ்சி உட்பட பல விஷயங்கள் குறித்த தகவல்கள் மற்றும் அறிவு என்னிடம் இருக்கிறது. ஆனால், யூபிஎஸ்சி போன்ற தேர்வுகளில் வெற்றியடைய சிந்தனை, பயன்பாட்டு திறன் மற்றும் நேர மேலாண்மைப் போன்ற திறன்கள் வேண்டும்” என பதிலளித்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வில் சாட் ஜிபிடி தொழில்நுட்பம் தோற்றது தற்போது பேசுபொருளாகி வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?