AI will replace millions of human jobs by 2023 but these 4 jobs to be at most risk, reveals study twitter
இந்தியா

மனித வேலைகளை கைப்பற்றும் AI : அதிக ரிஸ்க் இருக்கும் 4 வேலைகள் - ஆய்வு சொல்வதென்ன?

மனிதர்களை விட AI மிகவும் திறமையானது என்ற விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் பல வேலைகள் AI தொழில்நுட்பத்தால் மாற்றப்படும் அபாயம் உள்ளதாக ஒரு புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Priyadharshini R

தற்போது நடந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) புரட்சி, எதிர்காலத்தில் மனித வேலைகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களை விட AI மிகவும் திறமையானது என்ற விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் பல வேலைகள் AI தொழில்நுட்பத்தால் மாற்றப்படும் அபாயம் உள்ளதாக ஒரு புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சமீபத்திய ஆய்வு அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. AI பல்வேறு தொழில்களின் வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிகாட்டுகிறது.

2030 ஆம் ஆண்டளவில் இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் வேலை செய்யும் மணிநேரங்களில் 30 சதவீதத்தை குறிக்கும் என்றும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

AI

2030க்குள் AI இந்த வேலைகளை மாற்றும்

தரவு சேகரிப்பு போன்ற சில வகையான ஆட்டோமேஷன் தேவைப்படும் அனைத்து வேலைகளும் AI ஆல் மாற்றப்பட்டு எளிமையான முறையில் செய்யப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த AI மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் வேலைவாய்ப்புத் துறைகளில் அலுவலக ஊழியர்கள் சேவை, வாடிக்கையாளர் சேவை மற்றும் உணவு சேவை ஆகியவை அடங்கும்.

2030க்குள் அமெரிக்காவில் மட்டும் கூடுதலாக 12 மில்லியன் தொழில்சார் மாற்றங்கள் வரலாம் என்றும் வேலைகளில் உள்ள 11.8 மில்லியன் தொழிலாளர்களின் தேவை குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

AI காரணமாக எதிர்பார்க்கப்படும் இந்த வேலை மாற்றங்களால் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதையும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

வேலைகளில் ஏற்படும் மாற்றம், குறைந்த வருமானம் பெறுபவர்களை புதிய தொழில் துறைகளுக்குச் செல்வதற்கும் புதிய திறன்களைப் பெறுவதற்கும் கட்டாயப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

வங்கி, மருந்துகள், சுகாதாரம் மற்றும் போக்குவரத்து சேவைகள் போன்ற துறைகள் பெரிய டிஜிட்டல் மாற்றங்களுக்கு உட்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?