Akash Ambani
Akash Ambani Twitter
இந்தியா

ரிலையன்ஸ் ஜியோ தலைவரான ஆகாஷ் அம்பானி : யார் இந்த 90'ஸ் கிட்? - முழுமையான தகவல்

NewsSense Editorial Team

இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குநர் குழுவுக்கு, முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுநாள் வரை அப்பதவியிலிருந்து ஜியோவை வழிநடத்தி வந்த முகேஷ் அம்பானி தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இந்த முடிவு நேற்று (ஜூன் 27ஆம் தேதி) நடந்த ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக ஜியோ தரப்பில், இந்தியப் பங்குச் சந்தைகளிடம் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 - 22 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் (2022 ஜனவரி - 2022 மார்ச் வரை) ஜியோ நிறுவனம் 4,173 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

Akash Ambani and Mukesh Ambani

யார் இந்த ஆகாஷ் அம்பானி?

முகேஷ் அம்பானிக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். அதில் ஆகாஷ் மற்றும் இஷா அம்பானி இருவரும் இரட்டையர்களாகப் பிறந்தவர்கள். இளைய மகன் ஆனந்த் அம்பானி.

1991ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி பிறந்த ஆகாஷ் அம்பானி, திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் தன் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். இதே பள்ளியில் தான் ஆகாஷ் அம்பானியைக் கரம் பிடித்த ஸ்லோகா மேத்தாவும் படித்தார். இருவரும் நண்பர்களானதும் இப்பள்ளியில்தான் என பிசினஸ் டுடே வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

Akash Ambani with Shloka Metha

தொழில்நுட்பங்களின் மீது தீராக் காதல் கொண்ட ஆகாஷ் அம்பானி, கடந்த 2014ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர்கள் குழுவில் அறிமுகப்படுத்தப்பட்டார். ஜியோவின் 4ஜி எல் டி இ சேவை மேம்படுத்தல் பணிகளில் முன்னின்று பங்களித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோஃபோனை இந்திய மக்களுக்குத் தகுந்தாற் போல வடிவமைத்தது மற்றும் மேம்படுத்திய பொறியாளர்கள் அணியில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம் செயல்படத் தொடங்கிய ஒரு சில ஆண்டுகளிலேயே செயற்கை நுண்ணறிவு, மிஷின் லெர்னிங், பிளாக் செயின் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மேம்படுத்துவதிலும் பங்கெடுத்தவர் என மின்ட் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Akash Ambani and Isha Ambani

அதோடு ரிலையன்ஸ் ஜியோ தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் பல நிறுவனங்களைக் கையகப்படுத்தியதிலும் இவருக்கு ஒரு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2020 - 21 காலகட்டத்தில், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், செளதி அரேபியாவின் பி ஐ எஃப், இன்டெல்... போன்ற பல பெரிய நிறுவனங்கள், ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தது நினைவிருக்கிறதா...? அப்படி முதலீடுகளை ஈர்க்க ராப் பகலாகப் பணியாற்றிய அணியில் ஆகாஷ் அம்பானியும் இருந்தார் என்று கூறப்படுகிறது.

Akash Ambani with Shloka Metha

ரிலையன்ஸ் ஜியோ சேவைகளின் தொடக்க விழா பணிகளை தன் சகோதரி இஷா அம்பானியோடு முன்னின்று வழிநடத்தினார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பங்கெடுக்கும் மும்பை இந்தியன்ஸ் என்கிற கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களில் ஆகாஷ் அம்பானியும் ஒருவர்.

Akash Ambani

கடந்த 2019ஆம் ஆண்டு, தன் நீண்ட கால தோழியான ஸ்லோகா மேத்தாவைக் கரம் பிடித்தார். ரஸ்ஸல் மற்றும் மோனா மேத்தாவின் மகள் தான் ஸ்லோகா மேத்தா. ரோசி ப்ளூ டைமண்ட்ஸ் என்கிற நிறுவனம் இவர்களுடையது. இந்த தம்பதிகளுக்குச் சமீபத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவரை பிரித்வி என்றழைக்கின்றனர்.

2022 ஜூன் 27ஆம் தேதி முதல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் நான் எக்ஸிக்யூட்டிவ் இயக்குநராக இருந்த ஆகாஷ் அம்பானி, அந்நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவி ஐந்து ஆண்டுகளுக்கு என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?

”நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” - கல்வி விருது விழாவில் விஜய் பேசியது என்ன?

அமெரிக்கா: வெப்பத்தால் உருகும் ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை!

Health: இதய பிரச்னைகளுக்கான முக்கிய அறிகுறிகள் என்னென்ன?

இந்தியாவில் இருக்கும் மிளகாய் வகைகள் என்ன? எதற்காக பயன்படுத்தப்படுகிறது?