இந்தியாவின் முதல் வேத பூங்கா - குப்பைக் கிடங்கு அழகிய பூங்காவாக மாறியது எப்படி? Twitter
இந்தியா

இந்தியாவின் முதல் வேத பூங்கா - குப்பைக் கிடங்கு அழகிய பூங்காவாக மாறியது எப்படி?

Keerthanaa R

இந்தியாவில் முதன் முறையாக வேதங்களை அடிப்படையாக கொண்டு பூங்கா ஒன்று நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடவும், பெரியோர் ரிலாக்ஸாக நேரம் கழிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வண்ணம் இங்கு பல தாவரங்கள், மரங்கள் நடப்பட்டுள்ளன.

இந்த வேதிக் தீம் பார்க்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

வேத வன பூங்கா

உத்தரபிரதேசத்தின் நொய்டா செக்டர் 78ல் அமைக்கப்பட்டுள்ளது வேதிக் தீம் பார்க். இந்து மதத்தின் புராண இதிகாசங்களில் வரும் வேதங்களை அடிப்படையாக கொண்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளதால், இதனை வேத வன பூங்கா என்று அழைக்கின்றனர்.

இந்த பூங்காவில், புராண வேத நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுமார் 50,000 வகையான செடிகள், மரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்திய கலாச்சாரம், வரலாறு மற்றும் இயற்கையின் அழகியலை ஒரு சேர போற்றும் கலவையாக இந்த பூங்கா இருக்கும் என இதனை அமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்

சிறப்புகள் என்ன?

இந்த தீம் பார்க் சுமார் 27 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நடைபாதைகளுக்கு நான்கு வேதங்களான ரிக், யஜுர், அதர்வனம் மற்றும் சாம வேதங்களின் பெயர்களை சூட்டியுள்ளனர்.

இந்த பூங்காவின் சிறப்பே, இது அமைக்கப்பட்டுள்ள இடம் குப்பைக்கிடங்காக இருந்தது மாறியது தான். குப்பைகள் அகற்றப்பட்டு, நிலம் சுத்தம் செய்யப்பட்டு, மண் சமன் செய்யப்பட்டு கட்டுமானத்திற்கு உகந்ததாக இந்த நிலத்தை மாற்றினர்.

பல ஆண்டுகளாக குப்பைகள் குவிந்து கிடந்ததில் மண் சேதமடைந்திருந்ததால், கூடுதலாக மரங்கள் நடப்பட்டு, மண்ணின் வளம் மீட்கப்பட்டது

இந்த பூங்காவை 7 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றிற்கும் சாதுக்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். திரை ஒன்று அமைக்கப்பட்டு, புனித நூல்கள் அதிலுள்ள கதைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன, லேசர் ஷோக்களும் நடத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கல்ப விருட்சம், வேம்பு, ஆலம் உள்ளிட்ட 50,000 வகையான மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், சூரிய சக்தியில் இயங்கும் ஒரு amphitheatre மற்றும் வெளிப்புற உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?