அம்பானி மகன் நிச்சயதார்த்தம்
அம்பானி மகன் நிச்சயதார்த்தம் ட்விட்டர்
இந்தியா

Ambani: ஶ்ரீநாத்ஜி கோவிலில் முகேஷ் அம்பானி மகன் நிச்சயதார்த்தம்- கோயிலின் சிறப்புகள் என்ன?

NewsSense Editorial Team

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சென்ட் ஆகியோருக்கு, 2022 டிசம்பர் 29ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் நத்துவாரா பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீநாத் ஜி கோயிலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த ஸ்ரீநாத் ஜி கோயில் நத்துவாரா நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இந்து ஆலயம். இங்கு மகாவிஷ்ணுவின் திரு அவதாரங்களில் முக்கிய அவதாரமாக கருதப்படும் கிருஷ்ணர் எழுந்தருளியிருக்கிறார்.

ஸ்ரீநாத் ஜி கோயிலில் இருக்கும் மூல விக்கிரகம் சுயம்புவாக உருவானதாக கூறப்படுகிறது. அதுவும் இங்கு கிருஷ்ணர் குழந்தை வடிவத்தில் இருக்கிறார்.

இந்தியாவில் வைணவ சமயத்தைக் கடைபிடிக்கும் பல லட்சம் பேருக்கு, ஶ்ரீநாத் ஜி கோயில் ஒரு முக்கிய புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது.

கருப்பு நிற ஒற்றை மார்பிள் கல்லில் கிருஷ்ணர் கோவர்தன மலையை தன் இடது கையால் தூக்கிப் பிடித்து, கிராமவாசிகளையும் விலங்கினங்களையும் காப்பாற்றுவது போன்ற சிலை இங்கு இருக்கிறது.

நத்துவாரா பகுதியில் வரையப்படும் ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

1672ஆம் ஆண்டு கோசுவாமி என்கிற பூசாரிக்களால் ஸ்ரீநாத் ஜி கோயில் கட்டப்பட்டதாகவும், அது இன்று ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகப்பெரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உருவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திருக்கோயிலில் அமைந்திருக்கும் மூல விக்கிரகம் 17ஆம் நூற்றாண்டில் கோவர்தன் பகுதியில் இருந்து தற்போது இருக்கும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கோவர்தன் பகுதியில் இருந்து இறைவனின் திருமேனியை ஒரு வண்டியில் வைத்து நத்துவாரா நகரத்திற்கு எடுத்து வரும் வழியில் வாகனத்தின் சக்கரம் சேரில் சிக்கிக் கொண்டதாகவும், இறைவனே தேர் சக்கரம் சிக்கிய இடத்தில் உறைய விரும்புவதாகக் கருதி அப்பகுதியில் கோயில் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

ஶ்ரீநாத் ஜி கோயில், பகவான் கிருஷ்ணரின் தந்தை நந்த மஹாராஜாவின் கோயிலை ஓட்டி அமைக்கப்பட்டிருப்பதாகவும், எனவே இக்கோயிலை நந்த பவன் அல்லது நந்தாலயா என்றும் அழைப்பார்களாம்.

இக்கோயில் கிருஷ்ணரை முதன்மை தெய்வமாக வழிபடும் புஷ்டி மார்கத்தின் வழி நிர்வகிக்கப்படுகிறதாம். எனவே கோயிலின் கோபுரத்தின் உச்சியில் புஷ்டி மார்கக் கொடி பறப்பதையும் பார்க்க முடியும் என சில வலைதளங்கள் சொல்கின்றன.

இதே போல ஒரு ஶ்ரீநாத் ஜி கோயில் பஹரைன் நாட்டில் மனாமா பகுதியில் 1817ஆம் ஆண்டு நிறுவப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அக்கோயிலைப் புதுப்பிக்க 4.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தைத் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்பேற்பட்ட திருக்கோயிலில் தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகனின் நிச்சயதார்த்த விழா நடைபெற்றிருக்கிறது.

விரைவில் ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி துறையை முழுமையாக நிர்வகிப்பார் என சில வலைதளங்கள் சொல்கின்றன.

விரேன் மெர்சன்ட் அவர்களின் மகளான ராதிகா மெர்சன்ட் ஒரு தேர்ந்த நாட்டியக் கலைஞர். அவர் தன் பள்ளிப் படிப்பை மும்பையில் நிறைவு செய்துவிட்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

தற்போது என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் ஒருவராகவும் வேலை செய்து வருகிறார் ராதிகா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?