இந்தி கிராமம் ட்விட்டர்
இந்தியா

கேரளாவில் ஒரு இந்தி கிராமம் : டார்கெட் வைத்து படிக்கும் கிராம மக்கள் - ஏன்?

Gautham

தமிழ். அது வெறுமனே ஒரு மொழி அல்ல, உணர்வு. ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தன் மொழியை உயிருக்கு நேராக மதிக்கும் தமிழ் மக்கள், தங்கள் மொழியைக் காக்கவும், இந்தி மொழித் திணிப்பை எதிர்க்கவும் நடத்திய போராட்டங்களை எவரும் கண்டதில்லை.

அப்படி ஒரு மொழிப்பற்றை கன்னடர்கள் ஓரளவுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள் எனலாம். ஆனால் தமிழகத்தோடு ஒத்த கருத்துக்கள், கொள்கை கோட்பாடுகளைக் கொண்ட கேரளா இதற்கு நேர் எதிராக ஒரு விஷயத்தைச் செய்து வருகிறது.

மலையாளிகளும் பெரும் மொழிப்பற்றாளர்கள் தான் என்றாலும், தமிழர்களைப் போல மொழிப் போராட்டங்களை எல்லாம் நடத்தியதாகப் பெரிய வரலாறு ஏதும் இல்லை.

கேரளாவின் கிராம பஞ்சாயத்து ஒன்றில், அடுத்த குடியரசு தின கொண்டாட்டத்துக்குள் ஒட்டுமொத்த கிராம மக்களும் இந்தியை எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என சபதம் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கேரள மாநிலத்தில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள செலனூர் (Chelannur) கிராமம் தான் அது. தென் இந்தியாவிலேயே எந்த ஒரு கிராமம் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்று செயல்படவில்லை என்கிறது இந்தியா டைம்ஸ் கட்டுரை ஒன்று.

20 - 70 வயதுக்கு உட்பட்டவர்களே இத்திட்டத்தின் இலக்கு என்கிறார் செலனூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பி பி நெளசர். மேற்கூறிய வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்க பல பயிற்சிப் பட்டறைகள், பயிற்சியாளர்களைக் கொண்ட நிபுணர் குழுக்கள் என அனைத்தையும் அக்கிராமத்துக்குள்ளேயே அமைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் & தொண்டர்கள்

முறையாக இந்தி படித்து பட்டம் பெற்றவர்கள் மட்டுமின்றி, முன்னாள் ராணுவ வீரர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காகச் சென்று திரும்பியவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் & தாய்மார்கள் என இந்தி மொழி நன்றாகத் தெரிந்தவர்கள் யார் யாரென கண்டுபிடிக்கப்பட்டு பயிற்சி தரும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எதைக் கற்பிக்க வேண்டும், எதை பாடத்தில் வைக்க வேண்டும் என்பதை எல்லாம் அந்த கிராமத்தைச் சேர்ந்த இந்தி ஆசிரியர்களோடு கலந்து ஆலோசித்து இந்தி மொழி கற்றுக் கொள்வதற்கான பாட புத்தகங்களையே தனியாக உருவாக்கியுள்ளனர். இப்படித் தான் செலனூர் கிராம பஞ்சாயத்தில் உள்ள 21 வார்டுகளிலும் இந்தி மொழி பயிற்சி தொடங்கப்பட்டது என்கிறார் நெளசர்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பயிற்சி வகுப்புகளில், வகுப்புக்கு 25 - 30 பேர் பங்கெடுத்தனர். ஒவ்வொரு வாரமும் ஒரு வார்டில் 3 - 4 வகுப்புகள் நடத்தப்பட்டன.

இவை அத்தனையும் கடந்த ஆண்டு வெறும் 25,000 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடந்தது. அதே போல இந்த ஆண்டு வெறும் 50,000 ரூபாய் மட்டுமே இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது ஆச்சர்யமளிக்கிறது.

இத்திட்டத்துக்கு கேரள மாநில எழுத்தறிவுத் திட்ட ஆணையம், சர்வ ஷிக்சா அபியான், தக்‌ஷின் பாரத் இந்தி பிரசர் சபா என பலதரப்பினரும் செலனூர் கிராம பஞ்சாயத்து, இந்தி எழுத்தறிவு இலக்கை அடைய உதவியுள்ளனர். செலனூர் கிராம பஞ்சாயத்து மக்கள், வரும் குடியரசு தின கொண்டாட்டத்துக்குள் தங்கள் இலக்கை அடைய வாழ்த்துகள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?