ஆனந்த் மகிந்திரா: "உங்கள் வெற்றிக்கு இந்த 2 விஷயங்கள் முக்கியம்"- கரடி வீடியோவுடன் அட்வைஸ் Twitter
இந்தியா

ஆனந்த் மகிந்திரா: "உங்கள் வெற்றிக்கு இந்த 2 விஷயங்கள் முக்கியம்"- கரடி வீடியோவுடன் அட்வைஸ்

Antony Ajay R

இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கு மிகப் பெரிய பிரச்னை கவனக் குறைவு தான். எந்த வேலையை செய்தாலும் முழுமையாக அதில் ஈடுபடாமல் இருப்பது வழக்கமாகிவிட்டது.

மொபைல் நோட்டிஃபிகேஷன்கள் இதில் முக்கிய இடம் பிடிக்கின்றன. தேர்வுக்கு படிக்கும் போதுகூட கவனத்தை குவிக்க மாணவர்கள் சிரமப்படும் நிலை இருக்கிறது.

இளைஞர்களின் இந்த முக்கிய பிரச்னைக்கு எளிய வீடியோ மூலம் தீர்வை முன்வைத்துள்ளார்.

தியானம் செய்வது, கவனத்தைக் குவிப்பது நம் வெற்றிக்கு உதவும் என ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.

தியானம் செய்வது நாம் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து விடுபட உதவும் எனவும் சமீபத்திய ஆய்வுகள் கூறியுள்ளது.

ஒரு கரடி காத்திருந்து மீன் பிடிக்கும் வீடியோவை வெளியிட்டு, "தியானம், கவனம். உங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்" எனப் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

பல இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

21 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் ஒரு கரடி ஆற்றங்கரை ஓரமாக அமர்ந்திருக்கிறது. அது மிகுந்த கவனத்துடன் தண்ணீரைப் பார்த்துக்கொண்டு காத்திருக்கிறது.

சிறிது நேரத்தில் ஒரே ஜம்ப் செய்து தண்ணீரில் இருந்து மீனைப் பிடித்துவிட்டு அந்த கரடி வெளியேறுகிறது.

அந்த கரடி இதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. கடினமாக தண்ணீரில் இறங்கி மீனைத் துரத்தவில்லை... இந்த வீடியோ மூலம் தியானமும், கவனமும் காத்திருப்பும் நமக்கு வெற்றியைத் தேடித்தரும் என ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?