Anand Mahindra
Anand Mahindra Twitter
இந்தியா

"எனக்கு பயமா இருக்கு"ஆனந்த் மஹிந்திராவை பதற வைத்த லடாக் வழித்தடம் - நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்

Keerthanaa R

இந்தியாவின் பணக்காரர்களின் ஒருவரும், மிக பிரபலமான தொழிலதிபர்களிலும் ஒருவருமானவர் ஆனந்த் மஹிந்திரா. இந்தியர்களின் அன்றாட பேச்சுகளில் இவரது பெயர் இடம்பெறுமளவு இவர் ட்விட்டரில் பிரபலமாக இருக்கிறார்.

தனது டிவிட்டர் பக்கத்தில், தன்னை ஈர்த்த, வியக்கவைத்த, இன்ஸ்பயர் செய்த பல விஷயங்களை வழக்கமாக ஆனந்த் மஹிந்திரா பகிர்வதுண்டு. அந்த வரிசையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள பதிவு அவரை பயம்கொள்ள வைத்திருக்கிறது.

டிராவலிங் பாரத் என்கிற டிவிட்டர் பக்கத்தில் இந்தியாவின் பத்து மிக அபாயகரமான சாலைகள் என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அட்வென்ச்சர் பிரியர்கள் கண்டிப்பாக பர்ர்க்கவேண்டிய இடங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த பதிவில், லடாக்கில் உள்ள சோஜிலா பாஸ் கார்கில் என்ற இடத்தின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தது.

இதை ஆனந்த் மஹிந்திரா ரீட்வீட் செய்திருந்தார். அதில் டிராவலிங் பாரத்திற்கு நன்றி கூறியிருந்தார். அவர்கள் பகிர்ந்திருந்த பல ட்வீட்களை தான் ஷேர் செய்துள்ளதாகவும், அவர் செய்துமுடிக்க வேண்டிய விஷயங்கள் பட்டியலில் (பக்கெட் லிஸ்ட்) அவற்றை சேர்த்துக் கொண்டுள்ளதாகவும் கூறினார். "ஆனால், இந்த இடத்திற்கு நான் என்ன ஆனாலும் போகமாட்டேன்...நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு தைரியம் இல்லை" என்று தலைப்பிட்டிருந்தார்.

இதற்கு 1600க்கும் மேல் லைக்குகள் கிடைத்தது. இதை கவனித்த இணையவாசிகள், ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டுக்கு அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?