Anand Mahindra visits newly opened magnificent Hindu temple in Dubai Twitter
இந்தியா

"கடைசியாக வந்துட்டேன்" : ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த போஸ்ட் - திகைத்த இணையவாசிகள்!

இதற்கு முன்பு ஆனந்த் மஹிந்திரா கோவிலின் வீடியோவைப் பகிர்ந்து தனது அடுத்த துபாய் பயணத்தின் போது கண்டிப்பாக அந்த இடத்தைப் பார்ப்பேன் என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

Priyadharshini R

துபாயில் புதிதாக திறக்கப்பட்ட இந்து கோவிலுக்கு இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சென்றுள்ள புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

துபாயில் ஜெபல் அலியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.

ஏழு தேவாலயங்கள், ஒரு குருத்வாரா உட்பட ஒன்பது மத ஆலயங்களைக் கொண்ட ஜெபல் அலி என்னும் இடத்தில் நடந்த விழாவில் 200 க்கும் மேற்பட்ட பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் உள்ளூர் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Hindu Temple in Dubai

இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா துபாயில் திறக்கப்பட்ட அந்த இந்து கோவிலுக்குச் சென்ற படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில், கோவிலின் முன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். "இறுதியாக துபாயின் ஜெபல் அலியில் உள்ள அற்புதமான, நன்கு நிர்வகிக்கப்பட்ட புதிய கோவிலுக்கு நான் சென்றேன். ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவும் அங்கு உள்ளது என்று தலைப்பிட்டு இருந்தார்.

பலர் மகிந்திராவிடம் அவருடைய அனுபவத்தைப் பற்றிக் கேட்டபோது, ​​மற்றவர்கள் அந்த அழகிய கோயிலைக் கண்டு திகைத்தனர்.

இதற்கு முன்பு ஆனந்த் மஹிந்திரா கோவிலின் வீடியோவைப் பகிர்ந்து தனது அடுத்த துபாய் பயணத்தின் போது கண்டிப்பாக அந்த இடத்தைப் பார்ப்பேன் என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?