Kalavantin Durg: ஆபத்தான மலையில் டிரெக்கிங் செல்ல விரும்பும் ஆனந்த் மஹிந்திரா - ஏன்? twitter
இந்தியா

Kalavantin Durg: ஆபத்தான மலையில் டிரெக்கிங் செல்ல விரும்பும் ஆனந்த் மஹிந்திரா - ஏன்?

வழிநெடுக அடர்ந்த தாவரங்கள், சீரற்ற வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளை கடந்து மலையின் உச்சியை அடைவது சாதனை தான்.

Keerthanaa R

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கலவந்தின் துர்க் என்ற இடத்தில் டிரெக்கிங் செய்ய விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த இடம் குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள தொழிலதிபர், இது மேற்கு தொடர்ச்சி மலைகளில் செய்யக் கூடிய மிகவும் ஆபத்தான மலையேற்றம் என்றும் குறிப்பிட்டிருந்தார்

இந்த இடத்தில் அப்படி என்ன சிறப்பு? எங்கே இருக்கிறது இந்த கலவந்தின் துர்க்?

மகாராஷ்டிராவின் பிரபலமான டிரெக்கிங் ஸ்பாட்களில் ஓன்று தான் இந்த கலவந்தின் துர்க். ரைகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைகள் கடல்மட்டத்திலிருந்து சுமார் 2,205 அடி உயரத்தில் உள்ளது.

இங்கு மலையேற்றம் செய்வது மிகவும் சவாலானதாக, அட்வென்சர் நிறைந்ததாக இருக்கும் என்று கூறுகின்றனர். காரணம் இந்த மலையானது சுமார் 60 டிகிரியில் சாய்ந்த வாக்கில் உள்ளது.

வழிநெடுக அடர்ந்த தாவரங்கள், சீரற்ற வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளை கடந்து மலையின் உச்சியை அடைவது சாதனை தான்.

இந்த கலவந்தின் துர்க் என்பது அரசர்கள் சுற்றியுள்ள நிலப்பரப்பை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு மலைப்பகுதியாகும். இங்கு மிகவும் செங்குத்தாக செல்லும் படிக்கட்டுகள் உள்ளன. இதில் ஏறி செல்வது தான் சவாலே.

செல்லும் வழியில் அப்படியே பிரபல்காட் கோட்டையையும் காணலாம். மலையின் உச்சியை அடைந்துவிட்டால், அந்த மலைப்பகுதியையும், சுற்றியுள்ள பச்சை பசேல் என்ற பரந்து விரிந்த நிலப்பரப்பையும் கண்டு ரசிக்கலாம்.

ரைகாட் மாவட்டத்தில் உள்ள தாகுர்வாடி என்ற கிராமத்தில் இருந்து இந்த மலையேற்றத்தை தொடங்கலாம். அங்கிருந்து மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்

  • முதலில் தாகுர்வாடி கிராமத்தில் இருந்து பிரபால்மாச்சி பீடபூமி வரை

  • இரண்டாவது பிரபல்மாச்சி முதல் கர்னல் வரை

  • மூன்றாவது பிரிவானது கலவண்டின் சிகரம் வரையிலான இறுதி ஏறுதலாகும்

2.8 கிலோமீட்டர் தூரம் நீளும் இந்த மலையேற்றம் செய்து முடிக்க குறைந்தது 1.5 அல்லது 2 மணி நேரம் ஆகிறது. இந்த டிரெக்கிங்கிற்கு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது.

வழியெங்கும் அழகிய தாவரங்கள் அரிய வகை பறவைகள், சுமார் 30 நிமிடம் பயணித்த பிறகு கண்கவர் நீரூற்றுகள் நம் மனதை இலகுவாக்குகிறது.

இந்த மலையில் தான் மலையேற்றம் செய்ய விரும்புவதாக இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இந்த இடத்தை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என்றும், இந்த சவாலான மலையேற்றத்தை தன்னால் முடிக்க முடியுமா என்பதும் தெரியாது என்று தன் ட்வீட்டில் கூறியுள்ளார்.

பருவமழைக் காலத்தில் தான் இங்கு டிரெக்கிங்கே சிறப்பான நேரமாம். கூட்டத்தை விரும்பாதவர்களாக நீங்கள் இருந்தால், நவம்பர் அல்லது டிசம்பரில் இங்கு டிரெக்கிங் செல்வது உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?