ஆனந்த் மஹிந்திரா Twitter
இந்தியா

Monday Motivation : "இதை செய்தால் திங்கள் கிழமையும் அழகாக இருக்கும்!” - ஆனந்த் மஹிந்திரா

ஒவ்வொரு திங்களன்றும் ஆனந்த் மஹிந்திரா பொன்மொழிகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Keerthanaa R

திங்கள் கிழமை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெறுக்கும் ஒரு நாள். என்னதான் மற்ற நாட்களில் அலுவலகம் செல்ல நமக்கு உற்சாகம் இருந்தாலும், இந்த மண்டே வந்தால் மனதில் தோன்றும் இந்த இனம் புரியாத அலுப்பு, நம் நாளையே சோர்வாக்கிவிடும்.

ஆனால், உலகத்தில் சாதித்த நபர்கள் என்று நாம் பின்பற்றும் முக்கிய புள்ளிகள் அனைவருமே இந்த ”Monday Blues” ஐ கடந்து வந்தவர்கள் தான்.

இந்திய இளைஞர்கள் மத்தியில், பிரபலமாக இருப்பவர் ஆனந்த் மஹிந்திரா. எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் இவர், தன்னை ஈர்த்த, ஊக்குவித்த விஷயங்களை பகிர்வார். இவர் இந்த 'திங்கள்கிழமை அலுப்பை’ எதிர்கொள்ளவும், புன்னைகயுடன் அந்த நாளை ஏற்கவும் பொன்மொழி ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரான மார்க் டுவெயின் கூறிய, “நாம் எல்லோருமே ஒரு விதத்தில் பைத்தியக்காரர்கள் தான் என்பதை உணரும்போது, வாழ்க்கையின் முழு அர்த்தம் புரிகிறது” என்பது அந்த பொன்மொழி.

இதை பகிர்ந்த மஹிந்திரா குழும நிறுவனர், “இந்த உலகமே பைத்தியக்காரத்தனத்தின் வீடு. நாம் அனைவரும் அதில் வாழ்பவர்கள் என்பதை உணர்ந்தால், புன்னகையுடன் உங்களால் திங்கள் கிழமையில் வேலைக்கு செல்ல முடியும். நீங்கள் செய்யும் வேலையில், சிறப்பானவராக இருக்க முயற்சி செய்யுங்கள்” என்றார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்வீட்டுக்கு பல நேர்மறை பதில்கள் வந்தன. மஹிந்திராவின் கூற்றை ஏற்றுக்கொண்ட பலரும், தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு திங்களன்றும் ஆனந்த் மஹிந்திரா பொன்மொழிகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?