Andhra Pradesh: Ancient 14th-century Shiva lingam unearthed at Srisailam Temple Twitter
இந்தியா

ஆந்திரப் பிரதேசம்: ஸ்ரீசைலம் கோயிலில் பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு!

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புனித யாத்திரைத் தலம் தான் ஸ்ரீசைலம் கோயில்.

Priyadharshini R

ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீசைலம் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுனா கோயிலில் தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

14 அல்லது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக மதிப்பிடப்பட்ட ஒரு சிவலிங்கம், கோயில் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லிங்கத்துடன் அதே காலகட்டத்தைச் சேர்ந்த தெலுங்கு எழுத்துக்களில் ஒரு கல்வெட்டும் இருந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புனித யாத்திரைத் தலம் தான் ஸ்ரீசைலம் கோயில். சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் சிவனின் பன்னிரண்டு 'ஜோதிர்லிங்கங்களில்' ஒன்றாகவும் பதினெட்டு 'சக்தி பீடங்களில்' ஒன்றாகவும் கருதப்படுகிறது.

கட்டடத் தொழிலாளர்கள், இந்த வரலாற்றுப் பொருட்களைக் கண்டதும், உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் லிங்கம் மற்றும் கல்வெட்டுகளை ஆய்வு செய்து, மைசூர் தொல்லியல் துறைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?