Dr Ambedkar Twitter
இந்தியா

Andhra: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர்- ஆந்திர அரசு முடிவு

ஆந்திரா மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் ஒன்றான கோனாசீமா என்ற மாவட்டத்திற்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை விரைவில் அரசு வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Keerthanaa R

ஆந்திரா மாநிலத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 13 மாவட்டங்களில் ஒன்றிற்கு அம்பேத்கரின் பெயரை சூட்டவுள்ளது ஆந்திர அரசு. கடந்த ஜனவரி மாதம் 13 புதிய மாவட்டங்களை உருவாக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி முன்மொழிந்தது. முன்பு இருந்த 13 மாவட்டங்களிலிருந்து மேலும் 13 மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் பின் கடந்த ஏப்ரல் மாதத்தில் உருவாக்கப்பட்ட 13 மாவட்டங்களும் அதிகாரப்பூர்வமாக மறுசீரமைக்கப்பட்டது.

உருவாக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் அம்மாநில அரசு மக்களுக்காக பணியாற்றிய, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரை சூட்டியுள்ளது. ஏப்ரல் 4ல் மறுசீரமைக்கப்பட்ட 13 மாவட்டங்களில் ஒன்றான கோனாசீமா என்ற மாவட்டத்தை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் என்று பெயர் மாற்றவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கிழக்கு கோதாவரியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள இந்நகரம், அமலாபுரத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

YS Jagan Mohan Reddy

தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர், முன்னாள் முதலமைச்சர், பிரபல நடிகருமான நந்தமுரி தாரக ராமராவ் எனும் என்டிஆர் பெயரை ஒரு மாவட்டத்திற்குச் சூட்டியுள்ளனர். இதன் தலைமையிடம் விஜயவாடா. படேருவை தலைமையிடமாகக்கொண்டு அரக்கு பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து அல்லுரி சீதாராம ராஜு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது, மற்றுமொரு மாவட்டத்திற்குப் பிரபல இசைக்கலைஞர், 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவி அன்னம்மய்யா வின் பெயரிடப்பட்டுள்ளது. ராயச்சோட்டி இதன் தலைமையிடமாக இருக்கும். மேலும் அனந்தபுரத்திலிருந்து பிரிக்கப்பட்டு புட்டபர்த்தியை தலைமையிடமாகக்கொண்டு ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


இவைகளுடன், இந்திய அரசியல் அமைப்பை நிறுவிய, தலித் சமூகத்திற்காகப் போராடிய டாக்டர் அம்பேத்கரின் பெயரும் ஒரு மாவட்டத்திற்கு சூட்ட அரசு முன்வந்துள்ளது தகவல் பெறும் ஆதரவைப் பெற்றுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?