தேசிய சின்னம் Twitter
இந்தியா

பிரதமர் மோடி : தேசிய சின்னத்துக்கு அவமதிப்பா? குற்றச்சாட்டுக்கு சிற்பியின் விளக்கம் என்ன?

Antony Ajay R

டெல்லியில் கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்முகச் சிங்க உருவ அமைப்பு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட சிலையை பிரதமர் மோடி திங்கட்கிழமை திறந்து வைத்தார்.

இந்தப் புதிய சின்னம் மாற்றியமைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது.

ஏற்கனவே தேசிய சின்னத்தில் இருக்கும் சிங்கங்கள் அமைதியுடனும் கம்பீரமாகவும் இருக்கும் ஆனால் தற்போது மோடி திறந்து வைத்த சின்னம் ஆக்ரோஷத்துடன் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தின் சாரநாத்தில் உள்ள சின்னத்தை மாதிரியாகக் கொண்டே இந்த சின்னம் உருவாக்கப்பட்டதாக கூறும் சிற்பி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார், “இது சாரநாத்தில் உள்ள தேசியச் சின்னத்தின் மாதிரி வடிவம்தான். புதிய சிற்பத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தப் புகைப்படங்கள் சிற்பத்தின் கீழே இருந்து எடுக்கப்பட்டவை. எனவே, அதன் வெளிப்பாடுகள் ஆக்ரோஷமாகவும், வாய் பெரிதாகவும் தோன்றுகிறது” என்றுக் கூறியிருக்கிறார்.

எனினும் பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி பழைய இந்தியா - புது இந்தியா என பதிவிட்டிருப்பது மேலும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

இந்த சின்னத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?