அன்கிதா, புல்கித் Twitter
இந்தியா

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை: பாஜக பிரமுகரின் விடுதி இடிப்பு- கட்சி எடுத்த நடவடிக்கை?

Antony Ajay R

உத்தரகண்ட் மாநில பாஜக பிரமுகர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா. இவர் பவுரி மாவட்டத்தில் ரிஷிகேஷ் அருகே வனாந்த்ரா என்ற ஓய்வு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இங்கு வேலை செய்து வந்த அன்கிதா பண்டாரி என்ற 19 வயது பெண் ஊழியர் கொலை வழக்கில் விடுதியின் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை அன்கிதா காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவர் காணாமல் போனதாக விடுதி உரிமையாளர் என்ற வகையில் புல்கித் புகார் கொடுத்திருந்தார்.

கால்வாய் ஒன்றிலிருந்து அன்கிதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலனாதைத் தொடர்ந்து போலீசார் இதுகுறித்த விசாரணையை துரிதப்படுத்தினர்.

விசாரணையில் அன்கிதாவின் கொலையில் புல்கித் ஆர்யாவுக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து புல்கித் ஆர்யா மற்றும் விடுதி ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமின்றி மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி புல்கித்தின் விடுதியை இடிக்க உத்தரவிட்டார். இதனால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவரின் விடுதி இடிக்கப்பட்டது.

முதல்வர் புஷ்கர் சிங், "இதுமிகவும் துரதிர்ஷ்டமான சம்பவம், கொடுமையான குற்றம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது" என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த வழக்கில் காவல்துறை மந்தமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறது. அந்த பெண் 18ம் தேதி காணாமல் போனார். ஆனால் 21ம் தேதிதான் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கரிமா மெஹரா தசவுனி.

கைது செய்யப்பட்ட புல்கித் ஆர்யாவின் தந்தை வினோத் ஆர்யா மாநிலத்தில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். புல்கித்தின் சகோதரர் அன்கித் ஆர்யாவும் பாஜக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உடனடி நடவடிக்கையாக வினோத் ஆர்யா மற்றும் மகன்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது பாஜக.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?