எனக்கு 18, அவளுக்கு 28  NewsSense
இந்தியா

எனக்கு 18, அவளுக்கு 28 : அதிக வயது இடைவெளியில் திருமணம் - உளவியல் ரீதியாக பிரச்னை வருமா?

அப்பேற்பட்ட மேற்கத்திய நாடுகளில் கூட, ஒரு இளம் பெண், தன்னைவிட அதிக வயதுடைய ஆணை விரும்பி திருமணம் செய்து கொண்டால் அவர் பணத்துக்காக அந்த ஆணை திருமணம் செய்து கொண்டதாக 'கோல்ட் டிக்கர்' என கொச்சையாக அவமானப்படுத்தப்படுகிறார்.

Gautham

இந்தியாவில் நிச்சயிக்கப்படும் அல்லது காதலித்து கரம்பிடிக்கும் பெரும்பாலான திருமணங்களில், ஆண் அதிக வயதுடையவராகவும், பெண் ஆணை விட இளம் வயதுடையவராகவும் இருக்கும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேற்கத்திய நாடுகள் சில, பல தசாப்தங்களாகவே, அதிக வயதுடைய பெண் தன்னை விட இளம் வயதுடைய ஆணையோ, இளம் வயது ஆண் தன்னைவிட அதிக வயதுடைய பெண்ணையோ காதலித்து திருமணம் செய்வது சகஜமாகப் பார்க்கப்படுகிறது.

அப்பேற்பட்ட மேற்கத்திய நாடுகளில் கூட, ஒரு இளம் பெண், தன்னைவிட அதிக வயதுடைய ஆணை விரும்பி திருமணம் செய்து கொண்டால் அவர் பணத்துக்காக அந்த ஆணை திருமணம் செய்து கொண்டதாக 'கோல்ட் டிக்கர்' என கொச்சையாக அவமானப்படுத்தப்படுகிறார். ஒரு ஆண் அப்படி செய்தால், இது போன்ற விமர்சனங்கள் மேற்கத்திய நாடுகளில் கூட அதிகம் எழுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

தற்போது சுமார் 44 வயதான பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவல் மக்ரோனின் மனைவி பிரிஜெட் மக்ரோனுக்கு வயது 69. கிட்டத்தட்ட 25 வயது வித்தியாசம் இவர்களுக்குள். தனக்கு ஆசிரியராக இருந்தவரையே அவர் திருமணம் செய்து கொண்டது இந்தியாவில் அப்போது சர்ச்சையாகப் பேசப்பட்டது.

இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கடந்த 2015ஆம் ஆண்டு அம்ரிதா ராய் என்கிற ஊடகவியலாளரைத் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையில் சுமார் 26 வயது இடைவெளி இருக்கிறது.

இப்படி அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வது அவரவரது விருப்பம், வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் இப்படி அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் என்ன?

1. சமூகத்தினரின் வசை மொழிகள்

இந்தியாவைப் பொருத்தவரை, அதிக வயது இடைவெளியில் திருமணம் செய்து கொண்டால் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் தொடங்கி சொந்த பந்தங்கள் வரை அந்த தம்பதிகளின் காதுபடவே வசைபாடுவர். இந்த வயதில் திருமணம் தேவையா? 45 வயதில் காமம் கேட்கிறதா? 50 வயதிலும் ஒரு இளைஞனின் துணை வேண்டுமா? என வாய்க்கு வந்தபடி பேசுவர். என்னதான் மனதளவில் ஆலோசித்து, மகிழ்ச்சியோடு ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டாலும், சமூகத்தினரின் இந்த வசை சொற்கள் அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கலாம்.

2. வயதை குறைசொல்வது

எல்லா வயதுடைய தம்பதிகளுக்கு மத்தியிலும், எல்லா காலத்திலும் சண்டை சச்சரவுகள் வரத் தான் செய்யும். அப்படி சண்டை வரும் போது "என்னைவிட 10 வயது இளம் ஆணை / பெண்ணை திருமணம் செய்து கொண்டது என் தவறுதான்" என போகிற போக்கில் யார் வேண்டுமானாலும் கூற வாய்ப்பு இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. 40 வயது பெண், 20 வயது ஆணை திருமணம் செய்து கொள்கிறார் என்றால் இருவரின் ரசனைகள், பணத்தை செலவழிக்கும் விதம், தொழில்நுட்பத்தை கையாளும் விதம் எல்லாவற்றிலும் மாறுபாடுகள் இருக்கும்.

3. எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது

அதிக வயதுடைய பெண் / ஆண், தன் வயதை முன்னிட்டு உடல்நலம், உணவுப் பழக்கம் போன்றவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். இளம் வயதுடைய பெண் / ஆண் தன் மனைவி அல்லது கணவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட, தன் வேலை சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். இது நீண்ட காலத்தில் இருவருக்கும் இடையில் பெரிய பிளவையே உருவாக்கலாம்.

4. குழந்தை பெற்றுக் கொள்வது

இந்தியாவைப் பொருத்தவரை, எந்த வயதினராக இருந்தாலும் சரி, திருமணம் செய்து கொண்ட பின் குழந்தை பெற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுவர். அதிக வயது இடைவெளி கொண்ட தம்பதிகள் என்பதால் ஒருவர் ஆணித் தரமாக மறுத்தால், அது மற்றொருவரைக் கடுமையாக பாதிக்கும்.

5. உடலுறவு

அதிக வயது வித்தியாசமுள்ள ஒருவரை காதலித்து கரம் பிடித்த பிறகு, இயற்கையாகவே இளம் வயது ஆண் அல்லது பெண்ணுக்கு உடலுறவில் கூடுதல் ஆர்வம் இருக்கலாம். வயதான நபருக்கு, பாலுறவில் அத்தகைய ஆர்வம் இல்லாமல் போகலாம். இது ஒட்டுமொத்த இளம் வயது ஆண் / பெண்ணுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி, அடுத்தடுத்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.

6. அறிவுப் போராட்டம்

இன்றைய 40 வயதான ஆண் அல்லது பெண், 20 வயதுடைய ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதிக வயதுடையவர் பூமர அங்கிள் அல்லது ஆண்டியாக, ஃபேஸ்புக், டிவிட்டரே சமூக வலைத்தளம் என்கிற பார்வையில் இருப்பார். இவர் எஸ்பிஐ வங்கிக்கு 13 முறை நடையாக நடந்து 7.25 சதவீதத்தில் வீட்டுக் கடன் வாங்குவார்.

இளையவர் 2K கிட்டாக 'யோ யோ ப்ரோ' என்பார். டுவிச், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம் என அதிக டெக் சேவியாக அதையே சமூகவலைத்தளமாக நம்பி வாழ்வார். இவர் ரேசர் பே எக்ஸ் தளத்தில் செலவுக்கு 18% வட்டியில் கடன் வாங்குவார்.

இந்த தலைமுறை இடைவெளி, தம்பதிகளாக இருந்து ஒரு விஷயத்தை அணுகும் பல விஷயங்களில் தலைகீழ் முரண்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். யார் அறிவில் பெரியவர்? யார் சொல்வது சரி? என்கிற பிரச்னை தொடரும். இருவரும் ஒரு நோக்கில் சந்திப்பது சிரமமாகும்.

காதல் வயப்பட்ட தம்பதிகள், எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை எல்லாம் கடந்து ஒரு சுமூகமான உறவை உருவாக்கிக் கொள்ள முடியும். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவதும், சற்றே பிரைவசி கொடுத்து இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?