உலகின் மொத்த ஜனத்தொகையில் 10% பேர் இடது கைப் பழக்கம் உள்ளவர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் புகழ்பெற்ற மனிதர்களும் அடக்கம்.
உதாரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சச்சின், அமிதாப் பச்சன், பில்கேட்ஸ் ஆகியோர் இடது கை பழக்கம் உள்ளவர்கள் தான்.
பொதுவாக இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலதுபுற உடல் பாகங்களை விட இடது புற பாகங்கள் அதிகம் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இவர்களுக்கு அதிகளவில் படைப்பாற்றல் திறமை உள்ளதை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
வலது கை பழக்கம் உள்ளவர்களை விட, இடது கை பழக்கம் உடையவர்கள், சிக்கலான சவாலான விஷயங்களை கூட எளிதாக சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
அதே சமயம் இடது கை பழக்கமுடையோர், வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்களாம்.
வலது கை பழக்கமுள்ளவர்களை விட இவர்கள் வாய்மொழி ( Oral literature ) பணிகளில் சிறந்து விளங்குகின்றனர் என்பதை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இடது கை பழக்கம் கொண்டவர்களின் மூளையில், 'கார்பஸ் கொலாசம்' என்ற பகுதி, வலது கை பழக்கம் கொண்டவர்களைவிட, 11 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது.
சிக்கலைத் தீர்ப்பவர்கள்
சிறு வயதிலிருந்தே சவால்களை சாளிப்பவர்கள்
பொறுமை உணர்வு அதிகம்
தனித்துவமான தீர்வுகளை கையாளுபவர்கள்
சிறந்த மொழி திறன்
மாறுபட்ட சிந்தனை
படைப்பாற்றல்
உள்ளுணர்வு
விளையாட்டில் வல்லவர்
உலகில், பெண்களை விட ஆண்கள் தான் இடது கை பழக்கம் அதிகம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust