Ashneer Grover: 5 வருடம் வேலை பார்த்தல் மெர்சிடீஸ் கார் - பாரத் பே நிறுவனர் பலே அறிவிப்பு! twitter
இந்தியா

Ashneer Grover: 5 வருடம் வேலை செய்தால் மெர்சிடீஸ் கார் - பாரத் பே நிறுவனர் பலே அறிவிப்பு!

தனது புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தில், 5 வருடங்கள் வேலை செய்யும் நபருக்கு மெர்சிடீஸ் காரை பரிசாக வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார் நிறுவனர்.

Keerthanaa R

தன் நிறுவனத்தில் 5 வருடங்கள் வேலைப்பார்ப்பவர்களுக்கு மெர்சிடீஸ் காரை பரிசாக வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார் பாரத் பே இணை நிறுவனர் அஷ்னீர் க்ரோவர்.

தனது புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம், Third Unicorn குறித்த அடுத்த அறிவிப்பை கொடுத்தார் அஷ்னீர் க்ரோவர்.

இதற்கு புதிய ஊழியர்களை பணியமர்த்தவுள்ளார், மேலும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த நிறுவனத்தில், 5 வருடங்கள் பூர்த்தி செய்யும் நபருக்கு மெர்சிடீஸ் காரை பரிசாக வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார்

இது குறித்து தனது லின்க்ட் இன் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த 2023ஆம் ஆண்டை வித்தியாசமாக தொடங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்திற்கு உள்ளூர் அல்லது சுயமாக சம்பாதித்த மூலதனத்தை மட்டுமே பயன்படுத்தவுள்ளதாகவும் க்ரோவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வருடம் அஷ்னீர் க்ரோவர் தனது 40வது பிறந்தநாளின்போது இந்த புதிய ஸ்டார்ட் அப் குறித்து அறிவித்திருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?