அம்பேத்கர்: "பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்" - உங்கள் சிந்தனையை மாற்றும் பொன்மொழிகள் Twitter
இந்தியா

அம்பேத்கர்: "பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்" - உங்கள் சிந்தனையை மாற்றும் பொன்மொழிகள்!

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம், நம் திறமையும் நேர்மையும் வெளிப்படும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

Antony Ajay R

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாய், குரலற்ற மக்களின் நாயகனாக விளங்கிய அம்பேத்கர் வெறுமனே அரசியல் தலைவர் மட்டுமல்ல.

அவர் ஒரு பொருளாதார நிபுணர், சட்ட வல்லுநர், தத்துவங்களின் ஆழத்தில் திளைத்தவர், சமயங்களைப் படித்தவர், இசையின் நுட்பம் தெரிந்து வயலின் இசைத்தவர்.

மாநிலங்களின் உரிமைகள், மொழி, இனக்குழுக்கள், மக்கள் நலத்திட்டங்கள், அரசின் தன்மை, போராட்டங்களின் வழிமுறை என பலதளங்களில் சிந்தித்து உரையாடல் நிகழ்த்தியவர்.

சமூகத்தைக் குறித்தும் தனி மனிதர்களைக் குறித்தும் அம்பேத்கர் உரைத்த பொன்மொழிகளைப் பார்க்கலாம்.

  • ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

  • ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை, மதம் என்ற சொல்லை அழிக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை.

  • உன்னுடைய விடுதலை அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது. காவடி தூக்குவதிலோ உண்ணா விரதத்திலோ இல்லை.

  • தீண்டாமை அடிமைத்தனத்தை விட ஆபத்தானது. அது மதத்தை மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் அடிமைப்படுத்துகிறது.

  • சாதித் திமிறும் அதன் கோரப்பிடியும் அழிந்தால் தான் அரசியல், பொருளாதாரச் சீர்திருத்தம் ஏற்படும்.

  • குருட்டு பக்தி தன்னறிவை இழக்கச் செய்யும். பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் யாருடைய வாக்குறுதியையும் நம்பக்கூடாது.

  • அரசாங்கத்தை விமர்சிக்க நினைக்கும் தனிமனிதனால் அதனைச் செய்ய முடியாது. தனி மனிதன் செய்ய நினைத்தால் பல குறுக்கீடுகள் ஏற்படுகின்றன.

  • சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தால் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.

  • வறுமையிலும் அறியாமையிலும் வாடும் தம் சகோதரருக்குப் பணி செய்வது கற்றவர் ஒருவரின் தலையான கடமை.

  • நீதியின் அடித்தளத்தின் மீது எழுப்பப்படாத தேசம் ஒரு தேசமே அல்ல.

  • நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கு யாரும் அடிமை இல்லை.

  • தனி மனிதன் இயல்பாக உரிமைகளைப் பெற்றுள்ளான். அரசியல் அமைப்பு அவ்வுரிமைகளைப் பாதுகாக்கிறது.

  • பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள் தான், சிங்கங்கள் அல்ல. சிங்கங்களாக இருங்கள்.

  • ஒரு அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.

  • வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம், நம் திறமையும் நேர்மையும் வெளிப்படும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

  • சமூகத்தால் செய்யப்படும் சர்வாதிகாரம், அரசியலால் செய்யப்படும் சர்வாதிகாரத்தை விட மிகக் கொடியது.

  • ஒரு சமூகத்தில் பெண்கள் அடைந்துள்ள வளர்ச்சியைக் கொண்டு அந்த சமூகத்தின் வளர்ச்சியை அளவிடலாம்.

  • மாபெரும் லட்சியத்தையும் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடையலாம்.

  • இந்த சமூகம் சுதந்திரமான உணர்வைத் தராதவரை சட்டம் எத்தகைய விடுதலையை அளித்தாலும் அதனால் பயனில்லை.

  • கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?