'பூமியின் சொர்க்கம்' என்று பிரபலமாக அறியப்படும் ஜம்மு காஷ்மீர் அதன் இயற்கை அழகு, பனி மூடிய மலைகள், ஏராளமான வனவிலங்குகள், விருந்தோம்பல் மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்கள் ஆகியவற்றிற்கு மிகவும் பிரபலமானது.
காஷ்மீரில் இன்னும் பல அறியப்படாத அழகுகள் உள்ளன. அப்படி பரந்த சுற்றுலாத் திறனைக் கொண்ட காஷ்மீரின் அறியப்படாத பகுதிகளில் ஒன்று பாங்கஸ் பள்ளத்தாக்கு ஆகும்.
சில தசாப்தங்களுக்கு முன்பு வரை இந்த பள்ளத்தாக்கு ஆராயப்படாமல் இருந்தது.
கடந்த ஆண்டு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பொக்கிஷமான, அதிகம் அறியப்படாத, இடங்களை உள்ளடக்கிய 75 புதிய இடங்களை சுற்றுலாவுக்காக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. அதில் ஒன்று ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் அமைந்துள்ள பாங்கஸ் பள்ளத்தாக்கு.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் மறைந்திருக்கிறது இந்த இயற்கை எழில்கொஞ்சும் பள்ளத்தாக்கு.
காஷ்மீரின் சிறந்த ரகசிய இடங்களின் ஒன்றான பாங்கஸ் பள்ளத்தாக்கு இயற்கை அழகுக்கு மத்தியில் அதன் பசுமையான தாவரங்களுக்கும் பிரபலமானது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளத்தாக்கு, காஷ்மீரின் சுற்றுலா வரைபடத்தில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து சமீபத்தில் தான் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பிரதான பள்ளத்தாக்கு, போட் பாங்கஸ் (பெரிய பாங்கஸ்) மற்றும் லோகுட் பாங்கஸ் (சிறிய பாங்கஸ்) என்ற பெயர்களால் அறியப்படும் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது, இது தோராயமாக 300 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. புல்வெளிகள், மலைகள் மற்றும் நீரோடைகளுடன், காட்சியளிக்கும் பாங்கஸ் காஷ்மீரின் மிகவும் கவர்ச்சியான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
குப்வாராவிலிருந்து 48 கி.மீ தொலைவில், இமயமலை மலைகளின் அடியில் அமைந்துள்ள பாங்கஸ் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழலை கொண்டுள்ளது.
இது மலை மற்றும் புல்வெளிகள், தாவரங்கள், டைகா அல்லது ஊசியிலையுள்ள காடுகளை உள்ளடக்கியது.
பாங்கஸ் பள்ளத்தாக்கு மூன்று வழிகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அந்த இடத்தை அடையலாம். ஒன்று ஹந்த்வாராவின் மாவர் பக்கத்திலிருந்து, இரண்டாவது ஹந்த்வாராவின் ராஜ்வார் பக்கத்திலிருந்து மற்றும் மூன்றாவது சௌகிபால், குப்வாராவிலிருந்து.
ANI அறிக்கையின்படி, வரவிருக்கும் ஆண்டுகளில், நிலவும் அமைதியான சூழல் மற்றும் வளர்ச்சியின் காரணமாக, இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்ற பெயர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல வருட திட்டமிடலுக்குப் பிறகு, சௌகிபால் மற்றும் ராஜ்வார் வழித்தடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் மாவர் பாதையை மோட்டார் வாகனம் செல்வதற்கு ஏதுவாக மாற்றப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust