Sleep (Rep) Pexels
இந்தியா

"எந்நேரமும் தூங்குகிறார்" மனைவி மீது கணவர் போலீஸில் புகார் - எங்கே?

தன்னையோ, தனது பெற்றோரையோ கவனித்துக் கொள்ளவில்லை என்றும், நாள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருப்பதாகவும் கம்ரான் கான், மனைவி மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

Priyadharshini R

மனைவி எந்நேரமும் தூங்கிக் கொண்டே இருப்பதாக கணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெங்களூரில் நிகழ்ந்துள்ளது.

வடிவேலு நகைசுவையாக 23ஆம் புலிகேசி படத்தில் கூறுவார் “ தூங்கிவிட்டேனாம் அதை ஒரு குத்தமென்று சொல்கிறார்கள்” என்பது போல மனைவி எந்தநேரமும் தூங்குவதாக கணவர் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரில் வசிக்கும் தம்பதி கம்ரான் கான், ஆயிஷா ஃபஹ்ரீன். மனைவி ஆயிஷா மீது தான் கணவர் புகார் அளித்திருக்கிறார்.

Sleep

தன்னையோ, தனது பெற்றோரையோ கவனித்துக் கொள்ளவில்லை என்றும், நாள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருப்பதாகவும் கம்ரான் கான், மனைவி மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

அவரது மனைவி ஆயிஷா, அவரது தாயார் ஹீனா கவுஷர், தந்தை அரிபுல்லா, மைத்துனர் முகமது மொஹின் ஆகியோர் மீதும் பசவனகுடி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்நேரமும் தூங்கும் மனைவி, மாலை 5.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை தூங்குவதாகவும், பிறகு இரவு உணவுக்கு பின் மீண்டும் தூங்கும் மனைவி அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு தான் எழுவதாக கணவர் கம்ரான் கான் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை என்றும், தன்னுடைய அம்மா தான் சமைப்பது முதல் சுத்தம் செய்வது வரை எல்லா வேலையும் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இதையே மனைவி ஆயிஷா செய்து வருவதாக கம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தான் தற்போது காவல்நிலையத்தில் மனைவி மீது கணவர் புகார் அளித்திருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்து தங்களின் கருத்துகளை இணையம் வழியே வெளிப்படுத்தி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?