சக போக்குவரத்து காவலருக்கு அபராதம் விதித்த மற்றொரு காவலரை பாராட்டி வருகிறது இணையம்.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போக்குவரத்து விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இது அனைவருக்கும் பொருந்தும் என நிரூபிக்கும் வகையில், பெங்களூருவில் நடந்த சம்பவம் இருக்கிறது.
தவறான தலைக்கவசம் அணிந்து வந்ததால் ஒரு போக்குவரத்து காவலரை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்துள்ளார் மற்றொரு போக்குவரத்து காவலர் ஒருவர்.
பெங்களூருவின் ஆர்டி நகர் போக்குவரத்து காவல் தூறை ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தது. அதில் ஒரு காவலர் இருசக்கர வாகனத்தில் ஒரு போக்குவரத்து காவலர் இருக்கிறார். அவரிடம் அங்கு பணியமர்த்தப்பட்டிருந்த மற்றொரு போக்குவரத்து காவலர் இவருக்கு அபராதம் விதித்து சலான் வழங்குகிறார்.
பகிரப்பட்டிருந்த டிவிட்டர் பதிவில் அவருக்கு ஏன் அபராதம் விதிக்கப்பட்டது எனவும் காவல் தூறை தெரிவித்திருந்தது. அந்த காவலர் தவறான ஹெல்மெட்டை அணிந்திருந்தது தான் காரணம். அவர் அணிந்திருந்தது Half Helmet. இதை அணிபவர்களுக்கு ஆபத்து தான் அதிகம்.
இதனால், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பலரும் காவலரின் கடமை உணர்ச்சியை பாராட்டிய நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டணையை சிரித்தபடி பெற்றுக்கொண்ட காவலர் அதிக கவனம் ஈர்த்து வருகிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust