'யாரு சாமி நீ' பைக்கில் செல்லும் போதும் லேப்டாபில் வேலை செய்த Bengaluru பெண் - வைரல் பிக்! Twitter
இந்தியா

யாரு சாமி நீ? பைக்கில் செல்லும் போதும் லேப்டாபில் வேலை செய்த Bengaluru பெண் - வைரல் பிக்!

பெங்களூரில் இருக்கும் hustle கலாச்சாரம் (நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் சலசலப்பு), வேலைக்கு வைக்கப்படும் காலக்கெடு மற்றும் பணியில் தரப்படும் அழுத்தம் ஆகியவற்றை ட்விட்டரில் கேள்விக் கேட்டுள்ளனர்.

Antony Ajay R

வேலையைப் பொருத்தவரை கிராமங்களுக்கு நகரங்களுக்கும் நிறைய வித்தியாசமிருக்கும். வேலை செய்யும் நேரமும் தன்மையும் மாறுபட்டதாக இருக்கும்.

அதுவும் பெங்களூரு போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்த இடத்தில் கதையே வேறு. hustle culture என்ற பெயரில் பெங்களூருவில் பல வழக்கத்துக்கு மாறான சம்பவங்களைப் பார்க்க முடிகிறது.

நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு  சம்பந்தமில்லாத இடங்களில் இருந்து வேலை செய்யும் புகைப்படங்களுக் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.  

அப்படி சமீபத்தில் ஒரு பெண் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் போது லேப்டாபில் வேலை செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த பெண் அந்த சமயத்தில் ரேப்பிடோவில் பணித்ததாகக் கூறப்படுகிறது. Niharlohiya என்ற ட்விட்டர் ஐடியில் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது

Peak Bengaluru Moment எனக் குறிப்பிட்டு இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படத்துக்கு பல கமண்ட்கள் வந்திருக்கின்றன. அதில் ஒருவர் எந்த இடத்தில் எடுத்த புகைப்படம் எனக் கேட்டதற்கு Kora-Agara-ORR patch என பதிலாளித்துள்ளார்.

இந்த புகைப்படம் பெங்களூருவாசிகளிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பெங்களூரில் இருக்கும் hustle கலாச்சாரம் (சலசலப்பு), வேலைக்கு வைக்கப்படும் காலக்கெடு மற்றும் பணியில் தரப்படும் அழுத்தம் ஆகியவற்றை ட்விட்டரில் கேள்விக் கேட்டுள்ளனர்.

“ஒரு நாளில் 10 மணி நேரத்துக்கும் மேலாக பிரக்ஞை இல்லாமல் வேலைப்பார்த்து சொந்த ஊரிலேயே தொலைந்து போனது போன்ற உணர்வு தரும் அழுத்தத்தை கற்பனை செய்து பாருங்கள்! அவருக்கு தேவை எல்லாம் அமைதியான நெரிசல் இல்லாத சாலை தான்.” என ஒருவர் கமண்ட் செய்துள்ளார்.

மற்றொருவர் ஆட்டோவில் ஒரு பெண் லேப்டாப்புடன் வேலை செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்து “இப்போது ஆட்டோவிலும் சிக்னலிலும் வேலை செய்வது இயல்பானதாகிவிட்டது”. 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?