New Year-க்கு எங்க ட்ரிப் போகலாம்? தவாங் முதல் ஷில்லாங் வரை - பார்க்க வேண்டிய இடங்கள்! Twitter
இந்தியா

New Year-க்கு எங்க ட்ரிப் போகலாம்? தவாங் முதல் ஷில்லாங் வரை - பார்க்க வேண்டிய இடங்கள்!

எப்படியாவது வருடத்தின் முதல் நொடியை அர்த்தமுள்ளதாகவும், நினைவுகள் நிறைந்ததாகவும் மாற்றினால் அது போன்ற நினைவுகளை ஆண்டு முழுவதும் பெறலாம் என எண்ணுவோம். அதற்கான தலங்களை தான் இங்கு குறிப்பிட்டுள்ளோம்

Antony Ajay R

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமைய வேண்டும் என்றால் அந்த ஆண்டின் முதல் நாள் நமக்கு சிறந்ததாக இருக்க வேண்டும்.

இதற்காக நாம் சில முயற்சிகளை மேற்கொள்வோம். 12 மணிக்கு சிலர் பக்திமயமாக கோவிலுக்கு செல்வார்கள், சிலர் நண்பர்களுடன் கும்மாளம் அடிப்பார்கள்.

எப்படியாவது வருடத்தின் முதல் நொடியை அர்த்தமுள்ளதாகவும், நினைவுகள் நிறைந்ததாகவும் மாற்றினால் அது போன்ற நினைவுகளை ஆண்டு முழுவதும் பெறலாம் என எண்ணுவோம்.

இந்த நியூ இயர்க்காக சுற்றுலாவை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.

புத்தாண்டை எப்படிப்பட்ட இடத்தில் கழிக்க விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

ஜோட் | டல்ஹவுசி | கஜ்ஜியார் - இமாச்சல பிரதேசம்

சரியாக திட்டமிட்டு பயணம் செய்தால் இந்த அனைத்து பகுதிகளையும் நாம் ஒரே நாளில் சுற்றிப்பார்த்துவிட முடியும்.

இந்த மூன்று இடங்களும் அருகருகிலேயே இருக்கிறது.

நியூ இயர் இரவைக் கொண்டாட கஜ்ஜியார் சிறந்த இடம்.

அதிர்ஷடம் இருந்தால் இங்கு இரவில் பனிப்பொழிவைக் கூட பார்க்க முடியும்.

தவாங் - அருணாச்சல பிரதேசம்

தரை மட்டத்தில் இருந்து 3048 மீட்டர் உயரத்தில் இருக்கிறது இந்த நகரம்.

அழகிய நிலப்பரப்புகள், நீர்வீழ்ச்சிகளுடன் ஆன்மீக ரீதியாகவும் இந்த பகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இயற்கையை விரும்பும் யாருக்கும் நியூ இயரைக் கொண்டாட மிகச் சிறந்த தலமாக தலாங் அமையும்.

இங்கு 400 ஆண்டுகள் பழமையான புத்த தலங்கள் இருக்கின்றன.

பனிப்பொழிவையும் அட்வெஞ்சர்களையும் விரும்புபவர்கள் நிச்சயமாக இங்கு நியூ இயரைக் கழிக்கலாம்.

ஷில்லாங் - மேகாலயா

வடகிழக்கு மாநிலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன.

அவற்றில் முக்கியமானது மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங்க்.

இங்கு மிக அழகான மலைகள் காணப்படுகிறது. கண்கவரும் பச்சை நிறைந்த இங்கு உங்களது நியூ இயரை கழிப்பதன் மூலம் என்றென்றைக்குமான நினைவுகளை உருவாக்க முடியும்.

உமையம் ஏரி, லைட்லம் மலைப்பள்ளத்தாக்கு, யானை அருவி எனப் பல இடங்களை நாம் அங்கு பார்வையிட முடியும்.

சிம்லா - இமாச்சல பிரதேசம்

நியூ இயர் கொண்டாட்டத்துக்கு மிகச் சிறந்த தலம் சிம்லா.

டெல்லியில் இருந்து இயற்கை விரும்பிகளும் சுற்றுலா பிரியர்களும் இப்போதே சிம்லாவுக்கு முன்பதிவைத் தொடங்கிவிட்டனர்.

பனிச்சறுக்கு விளையாட விரும்பினால் சிம்லாவிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஃப்ரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

முசோரி, உத்தரகண்ட்

முசோரி இந்தியாவின் மிகப் பிரபலமான மலைப்பிரதேசமாகும்.

கொடைக்கானலைப் போல மலைகளின் ராணி என்ற பெயரும் இதற்கு உண்டு.

குளிர் காலத்தில் இங்கு 7 டிகிரி வரை வெப்பநிலை இறங்கும்.

இங்கு நடைபயணம் அல்லது மலையேற்றம் செய்வது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பது 200 விழுக்காடு உறுதி.

கேரளா

உங்களது நியூ இயர் மிகவும் அமைதியானதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக கேரளாவுக்கு செல்லலாம்.

கடவுளின் சொர்கமாக கருதப்படும் அண்டை மாநிலத்தில் மூணாறு மலை, வயநாடு மலை, பெரியார் மலை, தேக்கடி மலை மற்றும் வாகமன் மலை என பல மலைப்பிரதேசங்கள் இருக்கின்றன.

கோவளம், வர்கலா, கப்பாட் மற்றும் பையாம்பலம் போன்ற கடற்கரைகளையும் தேர்வு செய்யலாம்.

அவுலி, உத்தரகாண்ட்

அவுலி இந்தியாவின் பனிச்சறுக்கு தலைநகரம் என்ற பெயரினைப் பெற்றிருக்கிறது.

ஊசியிலை மரங்கள் மற்றும் ஓக் மரங்களால் நிறைந்த காடுகளுடன் கூடிய நந்தா தேவி மற்றும் நர் பர்வத் மலைகளின் அற்புதமான நிலப்பரப்பை இங்கு ரசிக்கலாம்.

பனியில் சாகசம் புரியும் இந்த மலைகளிலிருந்து இமயமலைகளைக் காணமுடியும்.

குல்மர்க் - ஜம்மு காஷ்மீர்

மலைகளில் இருக்கும் கேபிள் கார் பயணங்களுக்கு புகழ் பெற்றது குல்மர்க்.

12293 அடி உயரத்தில் பறக்கும் அனுபவத்தைப் பெறுவதற்காகவே இங்கு செல்லலாம்.

குளிர்காலம் முழுவதும் பனிப் போர்வையால் மூடப்பட்டிருக்கும் இந்த இடத்தில் பனிச்சறுக்கும் செய்ய முடியும்.

மணாலி - இமாச்சல பிரதேசம்

மலைகளில் இருக்கும் கேபிள் கார் பயணங்களுக்கு புகழ் பெற்றது குல்மர்க்.

12293 அடி உயரத்தில் பறக்கு அனுபவத்தைப் பெறுவதற்காகவே இங்கு செல்லலாம்.

குளிர்காலம் முழுவதும் பனிப் போர்வையால் மூடப்பட்டிருக்கும் இந்த இடத்தில் பனிச்சறுக்கும் செய்ய முடியும்.

கோவா

கொண்டாட்டங்களின் தலைநகரான கோவா இந்த வரிசையில் நிச்சயமாக இடம் பெறுகிறது.

மிகச் சிறிய மாநிலமாக இருந்தாலும் கோவாவைச் சுற்றி 35 அழகிய கடற்கரைகள் இருக்கின்றன.

இந்த கடற்கரைகளும் சரி, மிகப் பெரிய துத்சாகர் அருவியும் சரி நியூ இயர் இரவில் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கும் என்பது உறுதி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?