பீகார் : 40 பெண்களுக்கு ஒரே கணவர் - யார் இந்த ரூப்சந்த்? Twitter
இந்தியா

பீகார் : 40 பெண்களுக்கு ஒரே கணவர் - யார் இந்த ரூப்சந்த்?

இந்த காலத்தில் ஒரு மனிதன் எத்தனை மனைவிகளுடன் வாழ முடியும் 2, 5, 15? வாய்ப்பே இல்லை என்கிறீர்களா? பீகார் மாநிலத்தில் 40 பெண்களுக்கு ஒரே கணவர் இருப்பது தெரியவந்துள்ளது.

Antony Ajay R

திருமணமான ஆண்களுக்கு ஒரு மனைவியை சமாளிப்பதே பெரும் சுமையாக இருக்கும். எப்படி தான் முற்காலத்தில் ராஜாக்கள் பல மனைவிகளை சமாளித்தார்களோ என நினைக்கும் போது நம் காலத்து ஆண்களுக்கு வியப்பாக இருக்கும்.

சரி, இந்த காலத்தில் ஒரு மனிதன் எத்தனை மனைவிகளுடன் வாழ முடியும் 2, 5, 15? வாய்ப்பே இல்லை என்கிறீர்களா? பீகார் மாநிலத்தில் 40 பெண்களுக்கு ஒரே கணவர் இருப்பது தெரியவந்துள்ளது.

பிகாரில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பில், அர்வால் மாவட்டத்தில் உள்ள சிகப்பு விளக்கு பகுதியில் 40 பெண்கள் ரூப்சந்த் என்ற நபர்தான் தங்களது கணவர் எனக் கூறியுள்ளனர்.

கணக்கெடுப்பு அதிகாரிகள் அந்த பெண்களின் குழந்தைகளிடம் விசாரிக்கையில், அவர்களும் ரூப்சந்தை தங்கள் தந்தையாக கருதுவது தெரியவந்துள்ளது.

இந்த பெண்கள் சிகப்பு விளக்கு பகுதியில் வசிப்பதனால் ஆடியும் பாடியும் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்கின்றனர்.

இவர்களுக்கு நிலையான தங்குமிடமும் இல்லை. இந்த பெண்கள் தங்களது கணவருக்கு ரூப்சந்த் என ஒரு பெயரை சூட்டிக்கொண்டு குழந்தைகளை வளர்த்து வருகின்றனர்.

சிகப்பு விளக்கு பகுதியில் வசிக்கும் இந்த பெண்களின் வித்தியாசமான வாழ்க்கைமுறை நாடுமுழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?