Dharamdev Twitter
இந்தியா

22 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் நபர் : நெகிழ வைக்கும் காரணம்

Priyadharshini R

பொதுவாகத் தினமும் குளிப்பதனால், தோல் பராமரிக்கப்படுகிறது, தசைகளைத் தளர்த்துவது மட்டுமல்லாமல், பாக்டீரியாவை அழித்து ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தியையும் மேம்படுத்துகிறது என்று மருத்துவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் 22 ஆண்டுகளாக ஒருவர் குளிக்காமல் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் பீகாரைச் சேர்ந்த தரம்தேவ் ராம் என்பவர் தன் மேல் 22 ஆண்டுகளாகத் தண்ணீர் படாமல் இருக்கிறார்.

கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறாதா? இன்னொரு தகவல் என்வென்றால் அவருக்கு தோல் சம்பந்தமாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

bathing

இப்படி 22 ஆண்டுகளாக அவர் குளிக்காமல் இருக்க அவர் சொல்லும் காரணம் தான் இன்னும் ஆச்சரியப்பட வைக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நிலத் தகராறுகள், விலங்குகள் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் முற்றிலும் நிற்கும் வரை குளிக்கப் போவதில்லை என உறுதிமொழி எடுத்துள்ளார். அவர் குளிக்காமல் இருந்தால் இவையெல்லாம் சரியாகும் என்று நம்புகிறார்.

தற்போது 40 வயதாகும் தரம்தேவ் 22 ஆண்டுகளுக்கு முன்பு குளிப்பதை நிறுத்திவிட்டு இன்றுவரை தனது உறுதிமொழியைத் தொடர்கிறார்.

Dharamdev

அவரது வாழ்க்கையில் பல கட்டங்களைக் கடந்தும் அவர், அந்த முடிவிலிருந்து விலகவில்லை. அதாவது தரம்தேவ் மகனும் மனைவியும் இறந்த பிறகும் கூட அவர் தலை முழுகவில்லை எனக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு தர்மதேவ் கூறியதை உள்ளூர்வாசிகள் ஊர்ஜிதம் செய்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?