Gold Mine
Gold Mine NewsSense
இந்தியா

பீகார் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு : கொட்டிக் கிடக்கும் லட்சம் கோடி மதிப்பிலான தங்கம்

Gautham

இந்தியா என்கிற மிகப் பெரிய மாநிலங்களின் ஒன்றியத்தில், சில மாநிலங்கள் தங்களின் தொழில் வளம் மற்றும் வியாபார வளத்தைக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிகப்படியான மக்கள் தொகை, மிகக் குறைந்த தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களால் பின்தங்கியுள்ளன.

அப்பேற்பட்ட ஏழ்மையான பீகார் மாநிலத்தில், 222.8 மில்லியன் டன் தங்கம் இருப்பதாகவும், அது போக 37.6 டன் அளவுக்கு பல உயர்தர தாதுப் பொருட்கள் இருப்பதாகவும், சமீபத்தில் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பின் சர்வே அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கனிம மற்றும் உலோக வளங்கள் பீகார் மாநிலத்தில் ஜமுய் (Jamui) மாவட்டத்தில் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பீகார் மாநில அரசு, இந்த கனிம வளங்களை தேடிக் கண்டுபிடிக்கத் தேவையான அனுமதிகளை வாங்க இருப்பதாக, அம்மாநில அரசின் சில மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தங்கம் பொன்ற கனிம வளத்தைக் கண்டுபிடித்து அதை வெட்டி எடுக்க, பீகார் மாநில சுரங்கத் துறை மற்றும் புவியியல் துறையினர், தேசிய கனிம வளர்ச்சிக் கழகம், ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா உட்பட பல்வேறு அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து வருகிறார்கள் என பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜமுய் மாவட்டத்தில் கர்மாதியா, ஜாஜா, சொனோ ஆகிய இடங்களில் தங்கக் கனிம வளம் இருக்கலாம் என ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பு தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை ஆராய்ந்த பிறகே, பல்வேறு துறையினரோடு மாநில அரசு கலந்தாலோசிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்னும் சில வாரங்களில் முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள பீகார் மாநில அரசு, மத்திய அரசின் முகமைகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என பீகார் மாநில சுரங்கத் துறை ஆணையர் ஹர்ஜோத் கவுர் பாம்ரா பிடிஐ முகமையிடம் கூறியுள்ளார். மேலும், சில பகுதிகளில் பொது ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்திய ஒன்றிய அரசில் சுரங்கத் துறை இணை அமைச்சராக இருக்கும் பிரஹலாத் ஜோஷி, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்திலேயே பீகார் மாநிலத்தில் தான் இந்தியாவிலேயே அதிக தங்க வளம் இருப்பதாகக் கூறினார். எழுத்துப் பூர்வமாக பீகார் மாநிலத்தில் 222.8 மில்லியன் டன் தங்கம் இருப்பதாகவும், அது ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் தங்க வளத்தில் 44 சதவீதம் என்றும் குறிப்பிட்டு விடையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒட்டுமொத்த இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் பீகார், தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகாவது தன்னை ஒரு வளர்ந்து மாநிலமாக மாற்ரறிக் கொள்ளுமா என்பதற்கு காலம் தான் பதிலளிக்க வேண்டும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?