வங்காளத்தில் உள்ள கூச் பெஹார் என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒரு இரண்டு பிரியாணி கடைகளை வலுக்காட்டாயமாக மூட வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த கடைகளின் பிரியாணி ஆண்களின் பாலுணர்வை மட்டுப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மம்தா பேனர்ஜி அரசில் அமைசராக இருந்தவர் ரபீந்திர நாத் கோஷ். இவரிடம் கூச் பெஹாறில் உள்ள இந்த இரண்டு கடைகளும் ஆண்களின் பாலுணர்வை மட்டுப்படுத்துவதாக சிலர் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் அவர் அந்த கடைகளை முயூட்ட முடிவு செய்துள்ளார்.
"எங்களுக்கு அந்த பிரியாணியில் எந்த மசாலாக்கள் உபயோகிக்கிறார்கள் எனது தெரியவில்லை. அவை காமத்தை மட்டுப்படுத்துவதாக இருக்கிறது" என்று கடந்த சில நாட்களாக அந்த பகுதி மக்கள் தன்னிடம் குற்றச்சாட்டு முன்வைத்ததாக ரபீந்திர நாத் கோஷ் கூறுகிறார்.
பிரியாணி போன்ற உணவுகள் மீது இது போன்ற கதைகள் அதிகமாக கட்டிவிடப்படுகின்றன.
இது தொடர்பாக கூச் பெஹார் முனிசிபாலிட்டி சேர்மன், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் இருந்து வந்து பிரியாணி கடை வைத்திருப்பவர்கள் உரிய வர்த்தக உரிமம் இல்லாமல் கடை நடத்துகிறார்கள் எனக் கூறினார்.
இதனால் தான் அந்த கடைகள் மூடப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust