பாஜக எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் ஆபாசபடம் பார்த்தாரா? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன? Twitter
இந்தியா

பாஜக எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் ஆபாசபடம் பார்த்தாரா? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

எம்.எல்.ஏ லால் நாத் தனக்கு தொடர்ந்து ஃபோன்கால்கள் வந்ததாக அட்டன் செய்ததும் தானாகாவே ஆபாசப்படம் ஓடியதாகவும் கூறியிருக்கிறார்.

Antony Ajay R

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் இருக்கும்போது ஆபாசப்படம் பார்த்தது கேமராவில் பிடிபட்டிருக்கிறது.

ஜாதவ் லால் நாத் என்பவர் பாக்பஸ்ஸா தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். சட்டமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான உரையாடல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அவரின் அருகில் இருந்த யாரோ அந்த வீடியோவை எடுத்திருக்கின்றனர்.

அந்த வீடியோவில் பல ஆபாசப்படங்களை திரையில் தள்ளிவிட்டு, அவர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது தெரிந்துள்ளது.

இதுகுறித்து, “இந்த விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. உண்மைகளைக் கண்டறியாமல், என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. எனக்கு எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை" எனக் கூறியுள்ளார் சபாநாயகர் பிஸ்வபந்து சென்.

அஸ்ஸாம் ட்ரிபூனே செய்திதளம், பாஜக கட்சி சார்பில் லால் நாத்திடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், அவருக்கு நோட்டிஸ் கொடுக்கத் திட்டமிட்டு வருவதாகவும் கூறியிருக்கிறது.

இதுகுறித்து லால் நாத், "சட்டசபையில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். எனக்கு மீண்டும் மீண்டும் அழைப்புகள் வந்தன, நான் அழைப்பை எடுத்த பிறகு, ஆபாசமான வீடியோக்கள் தானாக எனது மொபைலில் ஓட ஆரம்பித்தன. நான் விரைவில் அவற்றை அணைத்தேன்" எனக் கூறியுள்ளார்.

எதிர்கட்சி தலைவர்கள் லால் நாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

2012 இல், கர்நாடகாவில் மூன்று பாஜக அமைச்சர்கள் - லக்ஷ்மண் சவடி, சி.சி. பாட்டீல் மற்றும் கிருஷ்ணா பலேமர் - சட்டசபையில் ஆபாசத்தைப் பார்த்து பிடிபட்டதால் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவர்களில் இருவர் கட்சி மூலமாக மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டனர் என தி வயர் தளம் குறிப்பிட்டுள்ளது.

குஜராத்திலும் ஷங்கர் சௌத்ரி மற்றும் ஜெதாபாய் பார்வாட் ஆகிய இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் ஆபாச படம் பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?