Boy with rare 'werewolf syndrome' has hair growing all over body
Boy with rare 'werewolf syndrome' has hair growing all over body Twitter
இந்தியா

"குரங்குப் பையன்" என கேலி: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட வாலிபரின் நம்பிக்கை கதை!

Priyadharshini R

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் 'வேர்வோல்ஃப் சிண்ட்ரோம்' என்ற அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் நந்த்லேடா கிராமத்தைச் சேர்ந்த லலித் என்பவர் ஆறு வயதிலிருந்தே ஹைபர்டிரிகோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளார்

ஹைபர்டிரிகோசிஸ் நோய் என்பது மனித உடல் பாகங்களில் அளவுக்கு அதிகமாக முடி வளர்வது ஆகும். இதனை இரண்டு வகைகளாக வகைப்படுத்துகின்றனர்.

முதல்வகை உடல் பாகம் முழுவதும் அதிகமான முடி வளர்வது, இரண்டாவது வகை சில குறிப்பிட்ட இடங்களை தவிர்த்து மற்ற பாகங்களில் அதிகமான முடி வளர்வது. லலித்தின் உடல் முழுவதும் முடி எக்கச்சக்கமாக வளர்ந்துள்ளது.

இதுகுறித்து லலித் கூறுகையில்

பள்ளியில் சக மாணவர்கள் என்னை "குரங்குப் பையன்" என்று அழைக்கிறார்கள், அவர்களை நான் கடிப்பேன் என்று பயப்படுவதாகவும் கூறுகின்றனர். சிறு குழந்தைகள் என்னைக் கண்டால் பயப்படுவார்கள்.

நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வருகிறேன். என் தந்தை ஒரு விவசாயி, நான் தற்போது உயர்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கிறேன்.

அதே நேரத்தில் எனது தந்தையின் விவசாய வேலைகளில் நான் உதவுகிறேன்" என்று லலித் கூறியதாக டெய்லி மெயில் கூறுகிறது.

உலகில் ஐம்பது பேர் மட்டுமே இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண மனிதர்களில் இருந்து நான் வித்தியாசமானவன்; தனித்துவமானவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நமது வேறுபாடுகள்தான் நம்முடைய மிகப்பெரிய பலம், நான் நானாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்கின்றார் லலித்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?