அருணாச்சல பிரதேசம் : சீனாவுடன் சண்டையிடும் இந்த மாநிலம் உருவானது எப்படி? Canva
இந்தியா

அருணாச்சல பிரதேசம் : சீனாவுடன் சண்டையிடும் இந்த மாநிலம் உருவானது எப்படி?

அருணாச்சல பிரதேசம் ஜனவரி 20, 1972ம் ஆண்டு வடகிழக்கு எல்லை ஏஜென்சி என்பதில் இருந்து அருணாச்சல பிரதேசம் எனப் பெயர் மாற்றப்பட்டது. அதற்கு யூனியன் பிரதேச அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது.

Antony Ajay R

வட கிழக்கு மாநிலங்களில் மிகவும் முக்கியமானது அருணாச்சல பிரதேசம். இந்தியா - சீனா எல்லையில் இருப்பதனால் அடிக்கடி போர், சண்டை அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது இந்த மாநிலம்.

சீனாவும் அருணாச்சல பிரதேசத்தைக் கைப்பற்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீன இராணுவம் எல்லையை ஒட்டி கிராமங்களை அமைத்து, ஊடுருவும் முயற்சிகளை மேற்கொள்கிறது.

இப்படி சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசம் அழகான மலைகளையும், பிரம்மபுத்ரா, சியோம் ஆற்றையும் கவுஹாத்தி போன்ற அழகிய நகரங்களையும் கொண்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் ஜனவரி 20, 1972ம் ஆண்டு வடகிழக்கு எல்லை ஏஜென்சி என்பதில் இருந்து அருணாச்சல பிரதேசம் எனப் பெயர் மாற்றப்பட்டது. அதற்கு யூனியன் பிரதேச அந்தஸ்தும் கொடுக்கப்பட்டது.

அருணாச்சல பிரதேச வரலாறு

யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் முன்னரே அருணாச்சல பிரதேசத்துக்கு சரியான வடிவம் கொடுத்திருந்தது பிரிட்டிஷ் அரசு.

1875ம் ஆண்டு முதல் பழங்குடி மக்கள் வசிக்கும் எல்லைப் புறங்களின் நிர்வாக, அதிகார வரம்பை முறைப்படுத்த பிரிட்டிஷ் அரசு நினைத்தது.

1912 - 13ல் பூர்வகுடி மக்களுடன் இணைந்து அருணாச்சல பிரதேசத்தை மூன்று துண்டுகளாக பிரித்தது பிரிட்டிஷ் அரசு.

பல்லிபரா துண்டு, லஹிம்புர் துண்டு, சதியா துண்டு நாட்டின் பிறப்பகுதிகளில் இருப்பது போல அல்லாமல் இந்த இடங்களுக்கு தனியான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.

இந்திய சுதந்திரத்துக்கு முன் 1946ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தால் இந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. 1950 ஜனவரி 26 வரை அஸ்ஸாம் தான் இந்த பகுதிகளை ஆண்டது.

ஆனால் அதன்பிறகு இந்திய அரசு அருணாச்சலபிரதேசத்தைத் தனியாக ஆள முடிவு செய்தது. அருணாச்சல பிரதேசம் மிகப் பெரிய நகரம் என்பதனால் அஸ்ஸாம் அதனைக் கொடுக்க முன்வரவில்லை.

1950 ஆம் ஆண்டில், பாலிபாரா, திராப், அபோர் ஹில் மாவட்டம் மற்றும் மிஷ்மி ஹில்ஸ் மாவட்டத்தின் நிர்வாகம் - அனைத்து சமவெளிப் பகுதிகளும் - அஸ்ஸாம் அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டது.

1951 ஆம் ஆண்டில், பகுதிகளின் அலகுகள் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டன - துன்சாங் எல்லைப் பிரிவு உருவாக்கப்பட்டது, இது பின்னர் நாகாலாந்துடன் இணைக்கப்பட்டது. வடகிழக்கு எல்லைப்புற (நிர்வாகம்) ஒழுங்குமுறை, 1954 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மீதமுள்ள பகுதிகள், வடக்கு-கிழக்கு எல்லைப்புற ஏஜென்சியாக (NEFA) நியமிக்கப்பட்டன.

NEFA ஆரம்பத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1965ம் ஆண்டு இந்த பகுதிகள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இறுதியாக 1972ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அருணாச்சல் பிரதேசத்துக்கு யூனியன் பிரதேச அந்தஸ்தை வழங்கினார். NEFA-ல் இருந்து அருணாச்சல பிரதேசம் என்ற பெயரையும் வைத்தார்.

இன்னும் 15 ஆண்டுகள் கழித்து 1987ம் ஆண்டு முழு மாநில அந்தஸ்தைப் பெற்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?