பட்ஜெட் தாக்கல் 

 

Facebook 

இந்தியா

பட்ஜெட் 2022 இதுவரை: அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி, 'ஒரே நாடு; ஒரே பதிவு முறை'

Antony Ajay R

``2022-2023-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது. இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் செயல்படும். ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள இந்த கரன்சி வர்த்தகத்துக்கான, புதிய விதிமுறைகளும் உருவாக்கப்படும்." - நிர்மலா சீதாராமன்

பாதுகாப்புத் துறைக்கு தேவையான 68% தேவையான தளவாடப் பொருட்கள் உள்நாட்டிலேயே வாங்கப்படும். பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் 25 சதவீதம் தொழில்துறை, ஸ்டார்ப் அப் மற்றும் கல்வி நிலையங்களுக்கு ஒதுக்க வழிவகை செய்யப்படும்.


நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் பேமென்டுகள் தாமதமாகாமல் இருக்க முழுக்க முழுக்க ஆன்லைன் பில் சிஸ்டத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அனைத்து மத்திய அமைச்சரவைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

Budjet 2022

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம், வாத்சல்யா மற்றும் ஊட்டச்சத்து 2.0 என்கிற மூன்று திட்டங்கள் அறிமுகம்.


வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு. சூரிய மின்சக்தி திட்டங்களுக்காக ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதி கிடைக்கும் படி செய்யப்படும். 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்க வழிவகை செய்யப்படும்.


2023-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் முடிக்கப்படும்.


அரசின் மூலதனச் செலவுகளுக்கு ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது கடந்த ஆண்டை விட 35.4% அதிகமாகும்.

கிராமங்களுக்கு இணையம்

மின் வாகனங்களில் சார்ஜ் போடுவதற்கு பதில் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் பிரத்யேக மையங்கள் நாடெங்கிலும் துவங்கப்படும்.


நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த `ஒரே நாடு; ஒரே பதிவு முறை' என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் பத்திரங்களைப் பதிவு செய்ய முடியும்.


நடப்பு ஆண்டிலேயே 5ஜி அலைகற்றைகள் ஏலம் விடப்படும்.


கிராபிக்ஸ், அனிமேஷன் துறைகளை மேம்படுத்த, இந்த துறைகளின் செயல்பாடுகளை இன்னும் சிறப்பானதாக மாற்ற சிறப்பு பேனல்கள் அமைக்கப்படும்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?