நிர்மலா சீதாராமன் ட்விட்டர்
இந்தியா

Economic Survey என்றால் என்ன? அதன் அம்சங்கள் அதீத முக்கியத்துவம் பெறுவது ஏன்?

ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி அமைச்சரிடம் ஒப்புதல் பெறப்படும். அதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.

NewsSense Editorial Team

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் Economic Survey என்றழைக்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். இதை இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் பதவியில் இருப்பவரின் வழிகாட்டுதலின்படி நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரத்துறை தயாரிக்கும்.

தற்போது இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஸ்வரன் என்பவர் பதவியில் இருக்கிறார். இவர் 2023ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி (செவ்வாய்கிழமை) பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி அமைச்சரிடம் ஒப்புதல் பெறப்படும். அதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.

இந்தியாவின் 1950 - 51ஆம் ஆண்டு முதல்முறையாக இந்திய அரசு தனக்கென ஒரு தனி பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. 1964 ஆம் ஆண்டு வரை பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் இரண்டும் சேர்த்து ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டதும் இங்கு நினைவு கூறத்தக்கது.

Dr. V. Anantha Nageswaran - முதன்மை பொருளாதார ஆலோசகர்

பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?

பொருளாதார ஆய்வு அறிக்கைகளுக்கும், இந்திய ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டுக்கும் இருக்கும் மிக முக்கிய வித்தியாசம் என்னவென்றால், பொருளாதார ஆய்வறிக்கை கடந்த காலத்தில் நடந்தவற்றை அதிக அளவில் கணக்கில் எடுத்துக் கொண்டு விவாதிக்கும். நிதி அமைச்சர் அறிவிக்கும் பட்ஜெட்டோ எதிர்வரும் நிதி ஆண்டிற்கானதாக இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டால் அதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமோ, நம்பத் தகுந்த ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுமோ, அதே அளவுக்கான முக்கியத்துவமும் நம்பகத்தன்மையும் கொண்டது இந்திய முதன்மைப் பொருளாதார ஆலோசகர் வெளியிடும் பொருளாதார ஆய்வறிக்கை.

இந்திய பொருளாதாரம் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது, எந்தெந்த துறைகளில் வளர்ந்து இருக்கிறது, என்ன மாதிரியான திட்டங்கள் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்திருக்கிறது அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது, எதிர்காலத்தில் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி எப்படி இருக்கும் போன்ற விவரங்கள் போதுமான தரவுகளோடு பல்வேறு பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதோடு இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகரின் பார்வைகளும், இந்திய பொருளாதாரம் எதிர்கொண்ட பிரச்னைகள், எதிர்கொள்ளவிற்கும் பிரச்னைகள் அதற்கான தீர்வுகளும் அவற்றில் குறிப்பிடப்படலாம்.

இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு என்ன எதிர்பார்க்கலாம்?

உலக அளவில் அதிவேகமாக வளரும் டாப் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக இப்போது வரை இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பதாகவே பல்வேறு நிதி நிறுவனங்களும் பொருளாதார வல்லுநர்களும் ஆருடம் கூறி வருகிறார்கள்.

உண்மையிலேயே இந்தியாவின் பொருளாதாரம் முன்பைப் போல அதிவேகமாக வளர முடியாத நிலையில் தான் இருக்கிறதா? என்பதற்கான விடையை இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் எதிர்பார்க்கலாம்.

அதேபோல கொரோனா வைரஸ் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பூகோள அரசியல் காரணிகளால் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் வேலை இல்லா திண்டாட்ட விகிதமும் அதிகரித்திருக்கிறது.

ரெசஷன் எப்போதும் வரலாம் என பலரும் ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனங்களே ஆயிரக்கணக்கிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறார்கள்.

இந்த பிரச்னைகள் எல்லாம் இந்தியப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்குமா அல்லது இவைகளை சமாளிக்க இந்தியா கையில் வைத்திருக்கும் திட்டம் தான் என்ன? என்பதை குறித்து அனந்த நாகேஸ்வரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?