நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நிதியமைச்சரின் சிறிய பட்ஜெட் உரைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிடைத்தன.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்து கவனம் பெற்று வருகிறது.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து அவரது கருத்தைக் கேட்ட நிதியமைச்சக ஊழியருக்கு அளித்த பதிலை அவர் பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, "'பிரதமரும், நிதியமைச்சரும் பொருளாதாரம் படிக்காதவர்களாக இருக்கும்போது, நீங்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?' என நிதியமைச்சக ஊழியரிடம் தெரிவித்தேன்.
ஒன்றிய பட்ஜெட்டின் குறிக்கோள்கள், முக்கிய அம்சங்கள், பொருளாதார உத்திகள், வளங்களை திரட்டும் திட்டங்கள் ஆகியவற்றை பட்டியலிடுமாறு நான் அவரிடம் கூறினேன். அவரும் என்னை பாராட்டும் விதமாக சிரித்தார்." என்றார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust