Honda Scooter Twitter
இந்தியா

சண்டிகர் : ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு ரூ.15 லட்சம் கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய நபர்

Priyadharshini R

சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரிஜ் மோகன். விளம்பர தொழில் செய்து வரும் இவர் சமீபத்தில் வாங்கிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு பேன்சி நம்பர் வாங்க எண்ணியுள்ளார்.

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஹரியானா மாநிலத்திற்குக் கூடுதல் வருவாயை ஈட்டுவதற்காக, சாமானிய மக்களுக்காக விஐபி நம்பர் பிளேட்டுகளை ஏலத்தில் விடப்போவதாக அறிவித்தார்.

இந்த சூழலில் சண்டிகர் மாநிலத்தின் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையத்தில் பேன்சி நம்பர்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. மொத்தம் 378 நம்பர்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ 1.5 கோடி ரூபாய் ஏலம் போயுள்ளது. அதில் முதலாவதாக CH01- CJ-0001 என்ற நம்பர் 15 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கு பிரிஜ் மோகன் ஏலத்தில் எடுத்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த பிரிஜ் மோகன், ‘நான் இந்த நம்பரை என்னுடைய ஆக்டிவா ஸ்கூட்டருக்காக சமீபத்தில் வாங்கினேன். ஆனாலும் நான் காரை தான் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

71 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய இந்த ஸ்கூட்டருக்கு ரூ.15 லட்சத்திற்கும் மேல் செலவிட்டு நம்பர் பிளேட் வாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?