Chandrayaan 3 மிஷனை கேலி செய்து பிரகாஷ் ராஜ் பகிர்ந்த ட்வீட் - நடிகர் மீது வழக்கு பதிவு twitter
இந்தியா

Chandrayaan 3 மிஷனை கேலி செய்து பிரகாஷ் ராஜ் பகிர்ந்த ட்வீட் - நடிகர் மீது வழக்கு பதிவு

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியவுடன் வரும் முதல் புகைப்படம் என்று தலைப்பிட்டு ஒரு டீ மாஸ்டரின் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.

Keerthanaa R

இந்தியாவின் சந்திரயான் 3 மிஷனை கேலி செய்த காரணத்திற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்கவுள்ளது. முதன் முறையாக, இந்த விண்கலம் நிலவில் தென் துருவத்தில் தரையிறக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால், இந்தியா வரலாற்று சாதனை படைக்கும்.

கடந்த ஜூலை 14ஆம் தேதி ஸ்ரீ ஹரி கோட்டவில் இருந்து நிலவுக்கு புறப்பட்டது விக்ரம் லேண்டரை ஏந்திய சந்திரயான் 3 விண்கலம்.

திட்டமிட்டபடி, விண்கலம் சரியான பாதையில் பயணித்தால், எந்த வித தடங்கலும் ஏற்படாமல் இருந்தால், ஆகஸ்ட் 23 (இன்று) மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும்.

அப்படி ஏதேனும் தடைகள் ஏற்படும் பட்சத்தில், ஆகஸ்ட் 27அன்று விண்கலம் தரையிறங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் இஸ்ரோ தலைவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வரலாற்று நிகழ்வை எதிர்நோக்கி இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் காத்திருக்கின்றன. இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்தைப் பற்றி ட்வீட் ஒன்று க்டந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியவுடன் வரும் முதல் புகைப்படம் என்று தலைப்பிட்டு ஒரு டீ மாஸ்டரின் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.

இந்த ட்வீட் சர்ச்சையை கிளப்பியது. இந்தியாவின் மிஷனை அவமதிக்கிறார் என்றும், பிரதமரை ஜாடையாக தாக்குகிறார் என்றும் பலரும் இவரை சாடினர்.

Prakash Raj

இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், மற்றுமொரு ட்வீட்டில்,

“வெறுப்பு வெறுப்பை மட்டுமே காணும். நான் ஆம்ஸ்ட்ராங் காலத்து ஜோக் ஒன்றினை குறிப்பிட்டு இதை பகிர்ந்தேன். நமது கேரளா டீ மாஸ்டர்களை கொண்டாடும் விதமாக இது பகிரப்பட்டது. கேலி செய்பவர்கள் இது எந்த டீக்கடைக்காரர் என நினைத்தீர்கள்? GROW UP” என்று பதிவிட்டிருந்தார்.

எனினும், இந்து அமைப்புகள் நடிகருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். கர்நாடகாவின் பகல்கோட் காவல் நிலையத்தில் நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையாக இஸ்ரோ ஒளிபரப்பவுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?