Chess Olympiad 2022 Twitter
இந்தியா

Chess Olympiad 2022: பாகிஸ்தான் புறக்கணித்தது ஏன்?

Antony Ajay R

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் தொடங்குகின்றன. இந்த நிலையில் இன்று திடீரென செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது பாகிஸ்தான்.

187 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பாகிஸ்தான் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க பயிற்சிகள் மேற்கொண்டு தயாரான போதிலும் அந்த நாடு இதில் பங்கேற்கவில்லை.

காரணம், கடந்த 21ம் தேதி ஒலிம்பியாட் ஜோதியானது கொண்டு செல்லப்பட்ட போது அதை காஷ்மீருக்குள் எடுத்துச்செல்லவில்லை.

ஶ்ரீநகர் வரை சென்று ஜோதி திரும்பியது. இதனை அரசியல் நடவடிக்கையாக சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் இந்த போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் அசிம் இப்திகார், ரேடியோ பாகிஸ்தானுக்கு அளித்த அறிக்கையில், “சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நடத்தும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்காக ஏற்கனவே பாகிஸ்தானியக் குழு பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இந்த மதிப்புமிக்க சர்வதேச விளையாட்டு நிகழ்வை இந்தியா அரசியலாக்குகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

செஸ் போட்டியில் இந்தியா அரசியலைக் கலக்கும் நடவடிக்கைக்கு எதிரான போராட்ட நடவடிக்கையாகவே இதைச் செய்வதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

இந்தியா விளையாட்டில் அரசியல் செய்வதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?