Coffee Twitter
இந்தியா

காபியில் சிக்கன் துண்டு - Zomato-வின் சமாதானத்தை ஏற்காத கஸ்டமர்

டெல்லியில் ஒரு உணவகத்திலிருந்து சுமித் என்ற நபர் சொமேட்டோ மூலமாக ஆர்டர் செய்த காபியில் சிக்கன் துண்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை சுமித், தன் ட்விட்டரில் பதிவிட, நெட்டிசன்கள் பலரும் இதை எதிர்த்து வருகின்றனர்.

Keerthanaa R

காபி குடிப்பது என்பது நம் நாட்டில் பலருக்கு பிடித்த பழக்கம். அதன் நிறம், சுவை, திடம் என பார்த்துப் பார்த்து ரசித்து அருந்தும் கூட்டம் இங்கு பெரிது. அதில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது அவர்களை மனதளவில் பாதிப்படைய செய்யும். சிலருக்கு காலை காபி குடிக்காவிடில், அந்த நாளே ஏனோ தானோ என்று தான் இருக்கும்.

சுவையை கூட காம்பிரமைஸ் செய்யாத இடத்தில், உங்கள் காபியில் நீங்கள் சிக்கன் துண்டைக் கண்டால்? அதிலும், நீங்கள் சைவ உணவை மட்டுமே உண்பவர் என்றால்?

Coffee

டெல்லியில் நடந்த சம்பவம் இது தான். சுமித் சவுரவ் என்ற நபர் ஆன்லைன் ஃபுட் டெலிவரி செயலியான சொமேட்டோ மூலமாக ஒரு பிரபல உணவகமான, Third wave India( third wave coffee) காபி ஆர்டர் செய்துள்ளார். இதை அருந்திய அவரது மனைவி, காபியில் ஏதோ வித்தியாசமாக தட்டுப்பட, எடுத்து பார்த்த போது, அது சிக்கன் துண்டு. இதை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும், சமூக வலைத்தளங்களில் இதை பற்றி பதிவேற்றினர்.

சுமித் காபி டம்ளரின் மூடியில் சிக்கன் துண்டை வைத்து, புகைப்படம் எடுத்து, ட்விட்டரில், "இது எல்லை மீறிய செயல்" என்று கூறி, சொமேட்டோ மற்றும் Thirdwave India வை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இதற்கு மன்னிப்பு கோரிய சொமேட்டோ, சுமித்துக்கு தங்கள் நிறுவனத்தில் ப்ரோ மெம்பர்ஷிப் தருவதாகக் கூறி சமாதானம் செய்ய முயன்றது.

அதற்கு பதிலளித்த சுமித், "நான் ஏற்கனவே 10 கோடி டர்னோவர் செய்கிறேன். எனக்கு உங்கள் ப்ரோ மெம்பர்ஷிப் வேண்டாம். எனது மனைவி சைவம், உங்களால் அவர் இன்று சிக்கன் உட்கொள்ள நேரிட்டது" என்று பதிவிட்டிருந்தார்.

உணவகம் மற்றும் சொமேட்டோவின் கவனக்குறைவை எதிர்த்தும், சுமித்தின் மனைவிக்கு ஏற்பட்ட மனக்கசப்புக்கும் நெட்டிசன்கள் பலர் குரல்கொடுத்து வருகின்றனர். பலர் இதை வேண்டுமென்றே செய்த செயல் தான், உணவகத்தின் மீதும் சொமேட்டோ மீதும் வழக்கு தொடருமாறு கூறி வருகின்றனர்.

Third wave India மன்னிப்பு கோரி, இதை சரி செய்ய தங்களுக்கு அவகாசம் கொடுக்குமாறும் கேட்டு தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

எனினும், இதற்கு மேல் அந்த உணவகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுமா என்பது சந்தேகம் தான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?