Coorg: இந்தியாவின் 'காபி தலைநகர்' என அழைக்கப்படும் இந்த ஊர் காபியில் என்ன ஸ்பெஷல்? Canva
இந்தியா

Coorg: இந்தியாவின் 'காபி தலைநகர்' என அழைக்கப்படும் இந்த ஊர் காபியில் என்ன ஸ்பெஷல்?

இங்கு வீசுகின்ற காற்றில் கூட காபியின் மணம் வீசுகிறது. குடகு மலை என்றும் அழைக்கப்படும் கூர்க் இந்தியாவின் காபி தலைநகர் என்று அறியப்படுகிறது.

Keerthanaa R

மனிதர்கள் மிகவும் விரும்பி அருந்தும் பானங்களில் ஒன்று காபி. பலருக்கு நாள் இந்த காபியில் இருந்து தான் தொடங்குகிறது.

காபியில் இருக்கும் கஃபைன் நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. அளவுக்கு அதிகமாகும்போது சில தீய விளைவுகளும் இருக்கின்றன.

உலகில் பல வகையான, விலையுயர்ந்த காபிகள் உள்ளன. இந்த காபிகள் தயாரிக்கப்படும் விதம் அதன் சுவை போன்ற காரணங்களுக்காக அவற்றின் விலை மாறுபடுகிறது.

இந்தியாவிலும் காபி விளைவிக்கப்படுகிறது. கர்நாடகா மாநிலம் கூர்க் முக்கிய இடம் வகிக்கிறது.

இங்கு வீசுகின்ற காற்றில் கூட காபியின் மணம் வீசுகிறது. குடகு மலை என்றும் அழைக்கப்படும் கூர்க் இந்தியாவின் காபி தலைநகர் என்று அறியப்படுகிறது.

இங்கு பரந்து விரிந்திருக்கும் காபி தோட்டங்கள் கண்ணுக்கு அழகிய காட்சிகளை வழங்குவதோடு, மனம் நிறையும் வாசனையையும் சுவாசிக்கச் செய்கிறது.

கூர்க் காபி, அதன் விதிவிலக்கான தரம், தனித்துவமான சுவை மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்காக கொண்டாடப்படுகிறது.

இங்கு 19ஆம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்கள் காபி தோட்டங்கள் தோற்றுவித்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதியின் குளிரான வெப்பநிலை காபி விளைய சாதமான சூழலாக உள்ளது.

மற்றொரு புறம் பாபா புடான் என்ற சூஃபி மத குறு இந்த பகுதிக்கு 17ஆம் நூற்றாண்டிலேயே காபியை கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.

கொடுவா என்ற சமூகத்தினர் காபி சாகுபடியை தங்கள் விவசாய நடைமுறைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக ஏற்றுக்கொண்டவர்களாக அறியப்படுகின்றனர்.

இங்கு உலக பிரபலமான காபி எஸ்டேட்கள் பல உள்ளன

டாடா காபி பிளாண்டேஷன்ஸ், கூர்க் காபி ஹில்ஸ் மற்றும் பொல்லிபெட்டா காபி எஸ்டேட் ஆகியவற்றை உதாரணமாக கூறலாம். இந்த காபி எஸ்டேட்களில் சுற்றுலா பயணிகளுக்கு காபி தயாரிக்கப்படும் விதத்தை விளக்குகிறார்கள். மேலும் வித விதமான காபிகளையும் நாம் சுவைக்கலாம்.

இன்று நகரம் முழுவதிலும் காபி தோட்டங்கள், எஸ்டேட்கள் நிறைந்துள்ளன. உலகின் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து காபி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் காபி தயாரிப்பில் தெற்கு மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. கர்நாடகா 71 சதவிகிதமும், கேரளா 21 சதவிகிதமும், தமிழ்நாடு 5 சதவிகிதமும் பங்கு வகிக்கிறது. கர்நாடகாவின் 71 சதவிகிதத்தில், 33 சதவிகித காபி கூர்கில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது.

கூர்கில் இரண்டு வகையான காபிகள் தயாரிக்கப்படுகின்றன. அராபிகா மற்றும் ரோபஸ்டா.

அரேபிகா, அதன் மென்மையான சுவை மற்றும் நறுமணத்திற்கு பெயர் பெற்றது. இதனை அதிக உயரத்தில் விளைவிக்கின்றனர். மற்றொரு வகையான ரோபஸ்டா, அதன் திடமான சுவை மற்றும் அதிக கஃபைன் உள்ளடக்கத்துக்காக பிரபலமாக உள்ளது. இதனை தாழ்வான பகுதிகளில் வளர்க்கின்றனர்.

இந்த காபி கொட்டைகளை கைகளால் பறிக்கின்றனர். பாரம்பரியமான வெட் மெத்தட் எனப்படும், "ஈரமான முறை" பயன்படுத்தப்படுகிறது.

செர்ரிகளை கூழாகச் செய்து, புளிக்கவைத்து, காபி பீன்ஸ் பிரித்தெடுக்கப்பட்டு கழுவப்படுகிறது.

இந்த செய்லமுறையானது, இறுதியாக கிடைக்கும் காபியில், அதன் தனித்துவமான சுவைகள் மற்றும் இயற்கை பண்புகளை தக்கவைத்துக்கொள்வதை உறுதி செய்கிறது.

கூர்கில் பார்வையாளர்களை ஈர்க்கும் மற்ற இடங்கள்:

  • அப்பி நீர்வீழ்ச்சி

  • துபாரே யானை முகாம்

  • நாகர்ஹோல் தேசிய பூங்கா

கூர்க் சென்று வந்தால் இந்த இடங்களை தவறாமல் பார்த்து ரசித்து வரவும். கூட கொஞ்சம் காபியும் வாங்கி வாருங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?