கூர்க் : கர்நாடகாவில் ஒரு Wine Hub- வீட்டிலேயே தயார் செய்யப்படும் வைன் பற்றி தெரியுமா?  Twitter
இந்தியா

கூர்க் : கர்நாடகாவில் ஒரு Wine Hub - வீட்டிலேயே தயார் செய்யப்படும் வைன் பற்றி தெரியுமா?

இங்கு வைன் பாரம்பரிய முறையில் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக நல்ல வைன் வாங்க பல்லாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். ஆனால் குடகு மலையில் 150 ரூபாய்க்கே நல்ல வைன் வாங்கிவிட முடியும் என்கின்றனர்.

Antony Ajay R

குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா… என் பைங்கிளி

என்ற புகழ்பெற்ற பாடலை நிச்சயமாக கேட்டிருப்போம். குடகு மலை அல்லது கூர்க் சென்றால் காற்றில் பாட்டுவருமா எனத் தெரியவில்லை. ஆனால், காப்பி, ஆரஞ்சு, மசாலாக்கள், பன்றி இறைச்சி, மிளகு, ஏலக்காய், தேனுடன் நம்மை உறையவைக்கும் குளிரும் கிடைக்கும். 

இவற்றுடன் சில காலமாக குடகு மலையில் வீட்டில் தயாரிக்கப்படும் வைனும் புகழ்பெற்று வருகிறது.  திராட்சை மட்டும் இல்லாமல் ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, ஆப்பிள், அண்ணாச்சி, சுக்கு, செர்ரி, கொய்யா, நாவல்பழம், காபி, வெற்றிலை, முந்திரி, மிளகாய், மல்பெர்ரி என பல ஃப்ளேவர்களில் வைன் கிடைக்கிறது.

கூர்கில் கடந்த 4-5 ஆண்டுகளாக மட்டுமே வைன் செய்து சுற்றுலாப்பயணிகளிடம் விற்பனை செய்யும் பழக்கம் இருக்கிறது. சமீபத்தில் தான் வீட்டில் வைன் தயாரிக்கும் லைசென்ஸும் வழங்கப்பட்டது.

மேலும் இங்கு வைன் பாரம்பரிய முறையில் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக நல்ல வைன் வாங்க பல்லாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். ஆனால் குடகு மலையில் 150 ரூபாய்க்கே நல்ல வைன் வாங்கிவிட முடியும் என்கின்றனர்.

500 ரூபாய்க்கு பல வகையான வைன்களை வாங்கிவிட முடிகிறது.  குடகு மலையில் ஒரிஜினலாக கிடைக்கும் பொருட்களை வாங்க எப்போதுமிங்கு கூட்டம் குவியும். 

ஆனால் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இங்கு மக்கள் கூட்டம் வருவது குறைந்துவிட்டது எனத் தெரிவிக்கின்றனர். கூர்க் செல்லும் போது வீட்டில் தயாரிக்கப்படும் வைனை மிஸ் செய்யாதீர்கள்.

வைன் தயாரிப்பு மற்றும் விற்பனை முறைப்பற்றி வீடியோவில் பார்க்கலாம்...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?