ஆன்லைன் வியாபாரங்கள் எப்போதும் நமக்கு ஏமாற்றத்தைத் தர மறப்பதில்லை. 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய ஹோட்டல்கள் தக்காளி சாதம் போன்ற பிரியாணியைப் கொடுத்து சர்பிரைஸ் செய்வார்கள். அந்த ஒரு நேர ஆன்லைன் உணவே நம் நாளை காலி செய்ய போதுமானதாக இருக்கும். இதனால் தானோ என்னவோ இந்த ஃபுடிட்ஸ்களுக்கு ஆன்லைன் என்றால் ஆவதில்லை.
கடந்த வாரம் கூட ஒரு ஆன்லைன் நிறுவனம் காபியில் சிக்கன் துண்டைப் போட்டு ஒரு சைவ உண்ணியை சங்கடத்துக்குள்ளாக்கியது. இதெல்லாம் விட ஒரு படி அதிக காமடியாக, தலையிலடித்துக்கொள்ளும் படியான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், ஒரு மாலை இளவெயில் நேரம் என உற்சாகத்துடன் வந்த குட்டி பசியைப் போக்க மொறுமொறுப்பான ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் பாவம் அவருக்கு நடந்த துயரம் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என எண்ணும் படி ஒரு சம்பவம் நடைபெற்றது.
அவருக்கு வந்த பார்சலில் ஆனியன் ரிங்ஸ்க்கு அதாவது மொறுமொறுப்பான ஆனியன் வளையங்களுக்கு பதிலாக வட்டவட்டமாக வெட்டப்பட்ட பச்சை வெங்காயங்கள் வந்திருக்கின்றது. இதனால் ஷாக் ஆன அவர் சிரிப்பதா அழுவதா என்ற குழப்பத்தில் இன்ஸ்டாவில் ரீல்ஸ் ஒன்றைப் பதிவேற்றியுள்ளார்.
"வெங்காயம் அழ வைப்பது வெறும் உருவகம் அல்ல" என அந்த ரீல்ஸ்க்கு தலைப்பிட்டுள்ளார்.
இந்த ரீல்ஸ்க்கான கமென்ட்டில் நெட்டிசன்கள் தங்கள் சார்பில் நகைச்சுவை கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவர், "பொறிச்சிக்க எண்ணெய்யும் மாவும் கொடுத்திருக்காங்களான்னு செக் பண்ணுங்க" என கூறியிருக்கிறார்.
என்ன தான் இந்த சம்பவம் நமக்கு நகைசுவையாக தெரிந்தாலும் பார்சல் வரும் வரை பசியுடன் நாக்கில் எச்சியூற காத்திருந்தவர் பாவம் தான்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust