பாபர் மசூதி இடிப்பு twitter
இந்தியா

பாபர் மசூதி இடிப்பு: இந்தியாவின் மிகப்பெரிய கலவரமாக வெடிக்க என்ன காரணம்? | Timeline

இரு மதத்தினரிடையே சண்டைகள் மூண்டு, அது இந்தியாவின் மிகப்பெரிய கலவரமாக வெடிக்க என்ன காரணம்? இதன் வரலாற்று பின்னணி என்ன? கீழே உள்ள டைம்லைன் ஐ பார்க்கலாம்

Keerthanaa R

இந்தியாவையே உலுக்கும் அளவு மிகப் பெரிய இந்து - முஸ்லிம் கலவரமாக மாறிய பாபர் மசூதி தகர்க்கப்பட்ட தினம் இன்று. டிசம்பர் 6, 1992ல் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அயோத்தியில் இருந்த இந்து கோவிலை அகற்றி, பாபர் மசூதி கட்டப்பட்டிருப்பதாக கூறி இந்து சமூகத்தினர் மசூதியை தகர்த்தனர். இது நாடெங்கிலும் இரு மதத்தினரிடையே பெரும் மதக் கலவரமாக வெடித்தது.

இந்துக் கோவில் தகர்க்கப்பட்டதா?

அயோத்தி இந்துக் கடவுள் ராமர் பிறந்த இடமாக நம்பப்படுகிறது. ராம்கோட் என்றழைக்கப்படும் மலையின் மேல் இருந்த ராமர் கோவிலை தகர்த்து, முகலாய பேரரசர் பாபரின் தளபதி மிர் பகி அங்கு மசூதி ஒன்றை 1528-1529 ஆம் ஆண்டு எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால், 1992ல் இந்து நேஷனலிஸ்ட் ஆட்கள் அந்த மசூதியை தகர்த்தனர். ஆனால், மசூதி இருந்த இடத்தில் உண்மையில் ராமரின் கோவில் இருந்தததா என்பது இன்றுவரை கேள்விக் குறியாகவே இருக்கிறது.

இரு சமூகத்தினரும் வழிபட்ட தலம்

இந்த பாபர் மசூதி இருந்த இடத்தில், இந்துக்கள் முஸ்லிம்கள் இரு சமூகத்தினரும் அவரவர் கடவுள்களை வழிப்பட்டு வந்ததாக இந்தியா டுடே தளம் தெரிவிக்கிறது.

அதாவது, இஸ்லாமியர்கள் மசூதிக்குள்ளும், இந்துக்கள் வெளியிலும் வழிபாடுகள் நடத்தினர்.

இருப்பினும், இரு மதத்தினரிடையே சண்டைகள் மூண்டு, அது இந்தியாவின் மிகப்பெரிய கலவரமாக வெடிக்க என்ன காரணம்? இதன் வரலாற்று பின்னணி என்ன?

கீழே உள்ள டைம்லைன் ஐ பார்க்கலாம்

1528:

பாபரின் தளபதி மிர் பகி என்பவரால் பாபர் மசூதி கட்டப்பட்டது

1853:

அயோத்தியில் இந்து - முஸ்லிம் இரு மதத்தினருக்கும் இடையில் முதன் முதலாக கலவரம் மூள்கிறது.

1859:

வழிபாட்டு தலங்களை பிரிக்க, பிரிட்டிஷ் அரசாங்கம் வேலி ஒன்றை அமைக்கிறது. வேலிக்கு உள்ளே இஸ்லாமியர்களும், வெளியில் இந்துக்களும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

1949:

மசூதிக்குள் ராமர், சீதை மற்றும் லக்‌ஷ்மணன் சிலைகள் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இரு தரப்பினரும் சிவில் வழக்கு தாக்கல் செய்கின்றனர். அரசு, பாபர் மசூதி இருக்கும் இடத்தை சர்ச்சைக்குரிய பகுதி எனக் கூறி மக்கள் வழிபட தடை வித்தித்தது, அந்த இடத்தை மூட உத்தரவிடுகிறது.

1984:

விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) ஒரு குழு அமைத்து, அங்கு கோவில் அமைக்க திட்டமிடுகிறது.

1986:

இந்துக்கள் வழிப்பட விதிக்கப்பட்ட தடை தளர்க்கப்படுகிறது. இதனால் ’பாபர் மசூதி செயற்குழு’ ஒன்றை அமைத்து இஸ்லாமியர்கள் போராட்டத்தை தொடங்கின்றனர்.

1989:

ராமர் கோவிலை அமைக்க விஎச்பி அடிக்கல் நாட்டுகிறது

1990:

விஎச்பியின் தொண்டர்களால் மசூதியின் ஒரு பகுதி தகர்க்கப்படுகிறது.

1991:

உத்திரபிரதேசத்தின் ஆட்சியில் அமர்கிறது பாஜக

1992:

பாபர் மசூதி முழுவதுமாக விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள், சிவ சேனா மற்றும் பாஜக தொண்டர்களால் இடிக்கப்படுகிறது. இதனால் கலவரம் வெடித்தது, கலவரத்தினால் 2000த்துக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்தன.

1998:

பிரதமர் வாஜ்பாயீ தலைமையில் கூட்டாட்சி அமைத்தது பாஜக

2001:

பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நாளில் மீண்டும் கலவரம் தொடங்கியது.

ஜனவரி 2002:

அயோத்திக் குழு ஒன்று வாஜ்பாயியால் நிறுவப்படுகிறது. இந்து முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த, சத்ருக்ன சிங் என்பவர் இந்த குழு தலைவராக நியமிக்கப்படுகிறார்.

பிப்ரவரி 2002:

உபி தேர்தல் அறிகையில் கோவில் கட்டுவதில் இருந்து பாஜக விலகுவதாக தெரிவிக்கிறது. மற்றொரு புறம் விஎச்பி கட்டுமான பணிகளை தொடங்க காலக்கெடுவை வைக்கிறது.

பிப்ரவரி 2002:

கோத்ராவில் இந்து ஆர்வலர்கள் வந்த ரயில் தாக்கப்படுகிறது. இதில் 58 பேர் கொல்லப்படுகின்றனர்.

மார்ச் 2002:

கோத்ரா நிகழ்வுக்கு பதிலடியாக குஜராத்தில் இந்து ஆர்வலர்கள் கலவரம் ஏற்படுத்துகின்றனர். இதில் 1000 முதல் 2000 மக்கள், பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மரணம் அடைந்தனர்.

ஏப்ரல் 2002:

உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை

ஜனவரி 2003:

நீதிமன்ற உத்தரவின் கீழ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ராமர் கோவில் இருந்ததா என்ற ஆராய்ச்சிகளை நடத்தினர்

ஆகஸ்ட் 2003:

மசூதிக்கு கீழ் கோவில் ஒன்று இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாக தொல்பொருள் ஆரய்ச்சியாளர்களின் அறிக்கை கூறியது.

செப்டம்பர் 2003:

பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதற்காக ஏழு இந்துத் தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் 1992 இல் அத்வானி சம்பந்தப்படிருந்தாலும், 2003ல் அவர் துணை பிரதமராக இருந்ததால் அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

அக்டோபர் 2004:

கோவிலை கட்ட தனது கட்சி உறுதியோடு இருப்பதாக அத்வானி கூறினார்.

ஜூலை 2005:

மசூதி இருந்த இடத்தில் இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகள் பயன்படுத்தி சுவர்களை தகர்த்தனர். தாக்குதல் நடத்திய 6 பேர் அன்றே கொல்லப்பட்டனர்.

ஜூன் 2009:

17 வருடங்கள் கழித்து, மசூதி இடிப்புக்கு வழிவகுத்த நிகழ்வுகளை விசாரித்து அறிக்கையை சமர்ப்பித்தது லிபர்ஹான் ஆணையம்.

நவம்பர் 2009:

பாஜகவின் முக்கிய தலைவர்கள் தான் மசூதி இடிப்புக்கும், கலவரத்துக்கும் காரணம் என லிப்ரான் கமிஷனின் அறிக்கை வெளியானதால் சலசலப்பு ஏற்படுகிறது

செப்டம்பர் 2010:

மசூதி இருந்த நிலத்தை மூன்று பாகங்களாக பிரித்து இஸ்லாமியர்களுக்கு ஒரு பாகம், இந்துக்களுக்கு ஒரு பாகம் மற்றும், நிர்மோஹி அகாராவுக்கு ஒரு பாகம் என பிரித்துக்கொடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை இந்துக்களுக்கு அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மே 2011:

தீர்ப்பை எதிர்த்து இரு சமூகத்தினரும் தொடுத்த மேல்முறையீடு வழக்கில், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

டிசம்பர் 2014:

வழக்கின் மூத்த வழக்கறிஞர் முகமத் பாரூக் மரணம்

பிப்ரவரி 2016:

ராமர் கோயில் கட்டக் கோரிய அயோத்தி விவகாரம் தொடர்பான விவகாரங்களில் தலையிட பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

டிசம்பர் 5, 2017:

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கை விசாரித்தது.

பிப்ரவ்ரி - ஜூலை 2018:

1994 இஸ்மாயில் ஃபரூக்கி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் அனுப்ப வேண்டும் என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

செப்டம்பர் 2018:

பெஞ்ச் அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - 1994 இல் வழங்கப்பட்ட தீர்ப்பை பெரிய பெஞ்ச் மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்று 3 நீதிபதி பெஞ்ச் 2:1 தீர்ப்பில் கூறியது.

ஜனவரி 8, 2019:

CJI கோகோய் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சை உருவாக்குகிறார். 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் முன் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு, செப்டம்பர் 2018 தீர்ப்பை ரத்து செய்தார்.

பாபர் மசூதி ஒரு "கட்டமைப்பின்மேல்" கட்டப்பட்டது என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் தொல்பொருள் சான்றுகள் காட்டப்பட்டன.

நவம்பர் 9, 2019:

உச்ச நீதிமன்றம் நிலத்தை இந்து கோவில் கட்ட அறக்கட்டளைக்கு ஒப்படைக்க உத்தரவிட்டது.

அயோத்தியின் தன்னிப்பூரில் அரசாங்கம் ஒதுக்கிய மசூதியைக் கட்டுவதற்கு, உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு மாற்றாக 5-ஏக்கர் நிலத்தை வழங்கவும் அது அரசுக்கு உத்தரவிட்டது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?