Did This Madhya Pradesh Temple Inspire The Old Parliament Building's Architecture? Twitter
இந்தியா

இந்த சிவன் கோவிலின் மாதிரி வைத்துதான் பழைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டதா? சுவாரஸ்ய கதை!

இந்தியாவின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை போலவே ஒரு கோவில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த கோவிலின் மாதிரியை வைத்து இந்த கட்டிடம் கட்டப்பட்டதா என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.

Priyadharshini R

1921, பிப்ரவரி 12 ஆம் தேதி இந்தியாவின் பழைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது நாடாளுமன்ற கட்டிடம் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது.

இந்த நாடாளுமன்றத்தில் தான் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றது, பல முக்கிய முடிவுகள் கையொப்பம் இடப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட வட்ட வடிவ கட்டிடத்தில் இருந்து முக்கோண வடிவ சன்சத் பவன் என்ற புதிய நாடாளுமன்றம் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆனால் இந்தியாவின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை போலவே ஒரு கோவில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த கோவிலின் மாதிரியை வைத்து இந்த கட்டிடம் கட்டப்பட்டதா என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.

மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள சௌசத் யோகினி கோவில் தான் இந்த பழைய நாடாளுமன்றத்தின் வடிவமைப்பு போன்றிருக்கிறது. அதற்கான காரணம் இரண்டு கட்டிடங்களின் வடிவம் தான்.

பொதுவாக கோவில் என்றால் சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் தான் இருக்கும். ஆனால் சௌசத் யோகினி கோவில் வட்ட வடிவில் உள்ளது

குவாலியரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிடாலி கிராமத்தின் மலை உச்சியில் உள்ள கோவில், தேவ்பால் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

சௌசத் யோகினி கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் சிவபெருமானைத் தவிர 64 யோகினிகளும் உள்ளன. யோகினிகள் 64 கலைகளை அடையாளப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இக்கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ள 64 அறைகள் குறிப்பாக யோகினிகளுக்கானது என்று நம்பப்படுகிறது. 170 அடி சுற்றளவு கொண்ட ஒரு மலையின் மீது அமைந்துள்ளது. மேலும் இந்த கோவிலில் மழைநீரை வடிகட்டுவதற்கு ஏற்ற துளைகள் கொண்ட பலகை அமைப்புகள் உள்ளன.

கட்டிடக் கலைஞர்களான எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர். இந்த கட்டிடத்தை திட்டமிடும் போது ரோமானிய மற்றும் இந்திய கட்டிடக்கலையின் கலவையை அவர்கள் மனதில் கருதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பழைய நாடாளுமன்ற கட்டிடம் 144 மணற்கல் தூண்களைக் கொண்டிருந்தது, அவை ஒவ்வொன்றும் 27 அடி அளவைக் கொண்டிருந்தன. அப்போது மொத்த கட்டுமான செலவு ரூ.83 லட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?