Did you know about the Village of Books in Kerala? Twitter
இந்தியா

இந்த ஊரே library தான்! இந்தியாவின் புத்தக கிராமம் பற்றி தெரியுமா?

Priyadharshini R

அமைதியான சூழல், இயற்கையின் அழகை ரசித்துகொண்டே, ஒரு கையில் தேநீர், இன்னொரு கையில் புத்தகம். அதுவும் நமக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால், அந்த அனுபவமே வேறு அல்லவா?

ஒரு புத்தக ரசனையை அதிகரிக்கும் விதத்தில் இந்தியாவில் புத்தக கிராமங்கள் உள்ளன.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள குளக்கடா பஞ்சாயத்தில் உள்ள பெரும்குளம் கிராமத்தைப் பற்றி இந்த பதிவில் பேசுகிறோம். கேரள மாநிலத்தில் புத்தக கிராமம் என்ற பெயரை பெரும்குளம் என்ற கிராமம் பெற்றுள்ளது.

ஜூன் 2020ல், பெரும்குளம் என்ற சிறிய கிராமத்திற்கு புத்தகங்களின் கிராமம் அல்லது புஸ்தகா கிராமம் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இது கேரளாவின் முதல் கிராமமாகவும், இந்தியாவில் இரண்டாவது இடமாகவும் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பிலார் என்ற மலைகிராமம், இந்தியாவின் முதல் புத்தக கிராமம் ஆக உருவானது.

நீங்கள் பெரும்குளம் கிராமத்திற்குச் சென்றால், சாலைகளின் ஓரங்களிலும், பிற இடங்களிலும் புத்தக அலமாரிகளைக் காணலாம். இந்த புத்தக அலமாரிகளில், குழந்தைகளுக்கான புத்தகங்கள், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் என பல படிக்கும் பொருட்களை நீங்கள் காணலாம்.

கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான புத்கங்களை அங்கிருந்து எடுத்துக் கொள்கின்றனர். படித்து முடித்த பின்னர் புத்தகத்தை மீண்டும் அங்கேயே வைத்து விடுகின்றனர். இந்தச் சேவையை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

யார் வேண்டுமானாலும் அலமாரியிலிருந்து புத்தகங்களை எடுக்கலாம், படிக்கலாம், மீண்டும் வைக்கலாம். கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நோக்கில் இந்த புத்தக கிராமத் திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் சிறிய இலவச நூலகம் நடத்துவதைக் கேள்விப்பட்டு அதைப் போலவே இங்கு இந்தத் திட்டத்தை கிராம மக்கள் கொண்டு வந்துள்ளனர். கிராமம் முழுவதும் 11 இடங்களில் புத்தக அலமாரி வைக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?