Did you know about these heritage villages of India? Twitter
இந்தியா

இந்தியாவின் இந்த பாரம்பரிய கிராமங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? இங்கு என்ன ஸ்பெஷல்?

Priyadharshini R

பாரம்பரிய கிராமங்கள் என்பது அவை சாதாரண கிராமங்களிலிருந்து வேறுபடுகின்றன. பழைய மரபுகள், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை கொண்டுள்ளன.

எல்லா கிராமங்களும் காலப்போக்கில் மேம்படுவது அல்லது மாறுபடுவது இயல்பே, ஆனால் இந்த பாரம்பரிய கிராமங்கள் மட்டும் தான் பழைய கலாச்சாரத்தை இன்னும் பின்பற்றி பாதுகாத்து வருகின்றன.

இந்த கிராமங்கள் முக்கியமாக சுற்றுலா நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை. பார்வையாளர்கள் இந்தக் கிராமங்களுக்குச் சென்று, அந்த இடத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள். இப்படி இந்தியாவின் இந்த பாரம்பரிய கிராமங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

பிராக்பூர், இமாச்சல பிரதேசம்

இந்தியாவின் முதல் பாரம்பரிய கிராமம் பிராக்பூர் என்பது உங்களுக்குத் தெரியுமா? காங்க்ரா மாவட்டத்தின் ஜஸ்வான் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி பிராக் டீயின் நினைவாக 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த பாரம்பரிய கிராமம் நிறுவப்பட்டது.

கடைகள், கற்கல் வீதிகள், ஸ்லேட் கூரை வீடுகள், கோட்டை போன்ற வீடுகளைக் காண கிராமத்திற்குச் செல்லுங்கள். மக்கள் கிராமத்தின் தனித்துவமான பழைய கட்டிடக்கலையை அப்படியே வைத்திருக்கிறார்கள், அதுவே பிரக்பூரின் சிறப்பாகும்.

கர்லி, இமாச்சல பிரதேசம்

பிராக்பூரிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள கார்லி, அதன் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றான இணைவு கட்டிடக்கலையுடன் ( fusion architecture) கூடிய சிறிய பாரம்பரிய கிராமமாகும்.

இந்த கட்டிடக்கலை, புதுமை கலந்த பாரம்பரிய கட்டமைப்பாக இருக்கும். இது ஒரு காலத்தில் பணக்கார வணிகர்களின் வீடுகளாக இருந்தன. கர்லியில் நீங்கள் காணக்கூடிய புகழ்பெற்ற பாரம்பரிய ஹோட்டல்களில் சாட்டௌ கார்லியும் ஒன்றாகும். இந்த கட்டிடக்கலைக்கு ஹோட்டல் சிறந்த உதாரணம்.

கிசாமா, நாகாலாந்து

கிசாமா பாரம்பரிய கிராமம் புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா நடைபெறும் இடம். நாகாலாந்தில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் விழாவாக இது ஒரு வாரம் நடைபெறுகிறது. இந்த விழாவில் வண்ணமயமான நிகழ்ச்சிகள், கைவினைப்பொருட்கள் கண்காட்சி, விளையாட்டு, உணவு கண்காட்சிகள் என இந்த விழாவில் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

கிசாமா தலைநகர் கோஹிமாவிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஒரு பாரம்பரிய நாகா கிராமம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

ரெய்க், மிசோரம்

மிசோரம் மாநிலம் மாமித் மாவட்டத்தில் ரெய்க் பாரம்பரிய கிராமம் அமைந்துள்ளது. இயற்கையால் சூழப்பட்ட, இந்த இடம் உள்ளூர் வாழ்க்கை முறையை அனுபவிக்க சிறந்த இடமாகும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?