இந்தியாவின் இந்த பிரபலமான நினைவுச்சின்னங்கள் பெண்களால் கட்டப்பட்டதா? ஒரு அடடே தகவல் Twitter
இந்தியா

இந்தியாவின் இந்த பிரபலமான நினைவுச்சின்னங்கள் பெண்களால் கட்டப்பட்டதா? ஒரு அடடே தகவல்

இந்தியாவின் சில வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னங்களை பெண்கள் கட்டமைத்துள்ளனர். அவற்றைக் குறித்த தொகுப்பு தான் இது.

Keerthanaa R

இந்தியா அதன் பாரம்பரியத்துக்காக நன்கு அறியப்பட்ட நாடாகும். முற்காலத்தில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் அறிவிலும், அரசியலிலும் முதன்மையாக திகழ்ந்தனர்.

தேசங்களை ஆண்டனர், கடல்கடந்து சென்று அரசுகளை வென்றனர், போரில் முன் நின்று உயிர் நீத்தனர்.

வேலு நாச்சியார் முதல் ஜான்சி ராணி வரை, இந்தியாவில் சிங்கப்பெண்களுக்கு பஞ்சமே இல்லை.

இந்தியாவின் சில வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னங்களை பெண்கள் கட்டமைத்துள்ளனர். அவற்றைக் குறித்த தொகுப்பு தான் இது.

மகாராணி சங்கர் கோவில், குல்மார்க்

சிவன் பார்வதியை பிரதான கடவுளாக கொண்ட இந்த கோவிலை எழுப்பியவர் மகாராணி மோஹின் பாய் சிசோதா. இவர் மன்னர் ஹரி சிங்கின் மனைவி ஆவார். இந்த கோவில் 1915ல் கட்டப்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில், நகரத்தின் மத்தியில் ஒரு சிறு குன்றின் மேல் இருக்கிறது. இதனால், நகரத்தின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும், கோவிலை காணலாம்.

இதனை ராணி கோவில் என்று அழைக்கின்றனர்.

இக்கோவிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இங்கு பூஜைகள் புரியும் பூசாரிகள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

ராணி கி வாவ், குஜராத்

11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடமானது, ராணி உதயமதியால் எழுப்பப்பட்டது. இதனை அவரது கணவரின் நினைவாக எழுப்பினார் ராணி உதயமதி. இது ஒரு படிக்கட்டு கிணராகும்.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்களில் ஒன்று இந்த ராணி கி வாவ்.

கட்டமைப்பு, கட்டடத்தின் நிலைத்தன்மை, இதனை எழுப்பவதற்கு பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், நீராதார சேகரிப்பு விதானங்கள் என்பன விஷயங்களுக்காக ராணி கி வாவ் ஒரு பிரபல சுற்றுலா தலமாகவும் இருக்கிறது.

விருபக்‌ஷா கோவில், கர்நாடகா

விஜயநகர ஹம்பியில் அமைந்திருக்கும் இக்கோவிலானது இந்தியாவின் பாரம்பரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இதனை ராணி லோகமாதேவி கட்டினார்.

அவரது கணவரும் மன்னருமான இரண்டாம் விக்கிரமாதித்தர், பல்லவர்களை போரில் வென்றார். அந்த வெற்றியை கொண்டாடி நினைவுக்கூரும் விதமாக இக்கோவில் கட்டப்பட்டது. கட்டமைப்பு பணிகளுக்கு ராணி லோகமாதேவி பல்லவ தலைநகரான காஞ்சியிலிருந்து சிற்பிகளை வரவழைத்தார்.

மோதி மஸ்ஜித், மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த மோதி மஸ்ஜிதை சிக்கந்தர் பேகம் என்பவர் எழுப்பினார். இது 1860ல் கட்டப்பட்டதாகும்.

ஹுமாயூன் கல்லறை, டெல்லி

முகலாய மன்னரான ஹுமாயூன் இறந்த பிறகு அவரது மனைவி ஹமிதா பானு பேகம் இந்த கல்லறையை எழுப்பினார். இது 1569ல் கட்டப்பட்டது. இதனை மிர்சா மிசாக் கியாஸ் என்கிற பெர்சிய கட்டிடக்கலை வல்லுநர் வடிவமைத்தார்.

தக்‌ஷினேஷ்வர் காளி கோவில், மேற்கு வங்கம்

ஜமீந்தாரும், சமூக சேவகருமான ராணி ராஷ்மோனி என்பவர் இந்த தக்‌ஷினேஷ்வர் காளி கோவிலை கட்டினார். ராணி ராஷ்மோனி, சதி போன்ற வழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.

மிர்ஜான் கோட்டை, கர்நாடகா

கர்நாடகாவின் மற்றொரு கட்டிடக்கலை சிறப்பம்சம் இந்த மிர்ஜான் கோட்டை. இதனை ராணி சென்னவைராதேவி என்பவர் எழுப்பினார். இந்த கோட்டை 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?