Difference Between Kids in 90’s and 2000’s Childhood  Twitter
இந்தியா

90s VS 2k கிட்ஸ் : விளையாட்டுகள் முதல் தண்டனைகள் வரை - என்னென்ன வித்தியாசம்?

Priyadharshini R

ஒவ்வொரு தலைமுறையினர்களும் பழைய விஷயங்களைக் கவனித்து, அவற்றைப் புதிய வழியில் வரையறுக்கிறார்கள். ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் மக்களின் குழந்தைப் பருவ நினைவுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

90களில் வளர்ந்த குழந்தைகள் பல்வேறு வகையான வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் தங்கள் அதிகபட்ச நேரத்தை நண்பர்களுடன் செலவிடுவார்கள். ஆனால் தற்போதைய தலைமுறையில், குழந்தைகள் கேஜெட்டுகளுக்கு முன்னால் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

90ஸ் மற்றும் 2கே கிட்ஸ்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

அன்றிலிருந்து இன்று வரையிலான சில அற்புதமான குழந்தை பருவ வேறுபாடுகளை இங்கே காணலாம்.

விளையாட்டுகள்

90 களில், குழந்தைகள் கிரிக்கெட், ஷட்டில், கோ-கோ, லாக் அன் கீ, கண்ணாமூச்சி போன்ற பல வெளிப்புற விளையாட்டுகளை விளையாடி, தங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்கினர்.

2000களில், குழந்தைகள் டெம்பிள் ரன், கேண்டி க்ரஷ், ஃப்ரூட் நிஞ்ஜா, PUBG, வீடியோ கேம்கள் போன்ற மொபைல் கேம்களை விளையாடி மற்ற விஷயங்களுக்கு செயலற்றவர்களாகிவிட்டனர்.

அன்றும் இன்றும் வகுப்புக் குறிப்புகள்

90 களில் உள்ள குழந்தைகள் தங்கள் நோட்ஸ்களை பென்சில்கள் அல்லது மை பேனா அல்லது ஜெல் பேனாக்களில் எழுதுவார்கள். அதனால் அவர்களுக்கு எழுதும் பழக்கம் அதிகமாக இருந்தது.

2000களில், குழந்தைகள் தொழில்நுட்பத்தின் மூலம் எல்லாவற்றையும் ஸ்மார்ட் போன் அல்லது கணினியில் நோட் செய்துக் கொள்கிறார்கள்.

Using Mobile

மொபைல் போன்கள்

அந்தக் காலத்தில் குழந்தைகள் இடைநிலைக் கல்வி வரை ஃபோன்களைக் கூட பார்த்திருக்க மாட்டார்கள், அவர்களுக்கு மொபைல் போன் வைத்திருப்பது என்பது பெரியவர்கள் விஷயம்.

Smart phone

ஆனால் இப்போதெல்லாம், 10 மாதக் குழந்தைகள் கூட பொழுதுபோக்கிற்காக மொபைல் போன்களை பார்க்கின்றனர்.

குழந்தைகள் கேம் விளையாடுவதற்கும், நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கும், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதற்கும், படிப்பதற்கும் அதிகமாக கேட்ஜெட்களை பயன்படுத்துகிறார்கள்.

பிறந்தநாள் பரிசுகள்

90 களில் வளர்ந்தவர்கள் தங்களுக்கு பிரியமானவர்களின் பிறந்தநாளுக்கு கிரீட்டிங் சாக்லேட்டில் வைத்து, அவர்களை பற்றி இதயத்தைத் தொடும் வரிகள் எழுத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பார்கள்.

2கே கிட்ஸ்கள் தங்கள் நண்பரின்பிறந்தநாளை கொண்டாட பல திட்டங்களை ஐடியாக்கள் எல்லாம் யோசித்து வித்தியாசமான முறையில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான தண்டனைகள்

குழந்தைகள் முட்டாள்தனமான தவறுகளுக்கு தண்டனை பெறும்போதெல்லாம், அவர்கள் வீட்டுப்பாடத்திற்குப் பிறகு மாலை நேரங்களில் தங்கள் நண்பர்களுடன் விளையாட மாட்டார்கள்.

2கே கிட்ஸ் மொபைல் கேஜெட்டுகள், டேப்லெட்டுகள், பிளேஸ்டேஷன் ஆகியவற்றை 2 நாட்களுக்குப் பயன்படுத்துவதைத் தடைசெய்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தண்டிக்கின்றனர்.

Theatre

அன்று முதல் இன்று வரையிலான திரைப்படங்கள்

90 களில் வளர்ந்தவர்கள் திரைப்படங்களை அரிதாகவே பார்க்கிறார்கள், பின்னர் கோலிவுட் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் திரைப்படங்களுக்கு மட்டுமே சென்றனர்.

2கே கிட்ஸ்கள் ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிப் படங்களையும் விரும்பி பார்க்கிறார்கள்.

இப்போது, ​​பெரும்பாலும் ஜிம் கேரி, ஜெரார்ட் பட்லர், ராபர்ட் டவுனி ஜூனியர், லியோனார்டோ டிகாப்ரியோ போன்றவர்கள் அவர்களுக்குப் பிடித்த நடிகர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?