Dinosaur fossils discovered In Jaisalmer is the oldest of its kind in the world Twitter
இந்தியா

இந்தியா தான் டைனோசருக்கு தாயகமா? உலகின் பழமையான டைனோசர் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் இந்திய புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். தாவரங்களை உண்ணும் டைனோசரின் பழமையான புதைபடிவ எச்சங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.

Priyadharshini R

நம் காலத்துக்கு பல்லாண்டு முன்பு வாழ்ந்த டைனோசர்கள் பற்றித் தெரிந்துகொள்வது நமக்கு எப்போதுமே ஆர்வமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் அழிந்து போன அந்த உயிரினத்திடம் மனிதர்கள் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.

டைனோசர்கள் பற்றிய சமீபத்திய கண்டுப்பிடிப்புகளில் ஒன்று முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது.

167 மில்லியன் ஆண்டுகள் பழமையான தாவரங்களை உண்ணும் டைனோசரின் எச்சங்கள் பாலைவனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எங்கு இதனை கண்டுபிடித்துள்ளனர் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் இந்திய புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். தாவரங்களை உண்ணும் டைனோசரின் பழமையான புதைபடிவ எச்சங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் நடந்ததாக டைம்ஸ் டிராவல் தெரிவித்துள்ளது.

அந்த டைனோசர் புதைபடிவத்தில், இது டிக்ரேயோசொரிட் வகை (நீண்ட கழுத்து கொண்ட தாவரத்தை உண்ணும் டைனோசர்) என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டிக்ரேயோசொரிட் டைனோசரின் முதல் கண்டுபிடிப்பு இதுவாகும். இந்த டைனோசர் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் 2018 இல் கண்டுபிடித்ததாக TOI தெரிவித்துள்ளது.

டைனோசர்

முழுமையான ஆராய்ச்சியின் மூலம், இது முன்னர் கண்டுபிடிக்கப்படாத இனம் என அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று அறிக்கை கூறியுள்ளது.

தார் பாலைவனம், இந்தியாவில் தோன்றியதை கூறும் வகையில் இந்த டைனோசருக்கு தாரோசரஸ் இண்டிகஸ் என்று பெயரிட்டனர்.

ஜெய்சால்மரில் மத்திய ஜுராசிக் பாறைகளின் ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சியின் போது, ​​குழு புதைபடிவத்தை கண்டுபிடித்ததாக TOI தெரிவித்துள்ளது. அந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு, ஆறு விஞ்ஞானிகள் குழு, கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்ய சுமார் ஐந்து ஆண்டுகள் எடுத்துகொண்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?