Tawang: இமயத்தின் மடியில் இருக்கும் இந்தியாவின் மிக பெரிய புத்த மடாலயம் - என்ன சிறப்பு?
Tawang: இமயத்தின் மடியில் இருக்கும் இந்தியாவின் மிக பெரிய புத்த மடாலயம் - என்ன சிறப்பு? twitter
இந்தியா

Tawang: இமயத்தின் மடியில் இருக்கும் இந்தியாவின் மிக பெரிய புத்த மடாலயம் - என்ன சிறப்பு?

Keerthanaa R

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடு என்பதால், ஆன்மிகம் பேசும் கோவில்கள் முதல் குகைகள் வரை இங்கு வீற்றிருக்கின்றன.

இவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான வரலாறும், சிறப்பம்சமும் உள்ளது.

இந்தியாவின் முக்கிய மதங்களில் ஒன்று பௌத்தம். இந்தியாவில் பௌத்த மடாலயங்களும் இருக்கின்றன. இந்தியாவின் மிகப் பெரிய புத்த மடாலயத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்

இமாச்சல பிரதேசத்தின் இமயமலைத் தொடரின் மடியில் அமைந்திருக்கிறது தவாங் மடாலயம். இது இந்தியாவின் மிகப் பெரிய மடாலயம், மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெரிய மடாலயம் ஆகும்.

சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த மடாலயம், கடல்மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி மேலே இருக்கிறது.

மலையின் மேல் அமைந்திருக்கும் இந்த மடாலயம் மனதுக்கு அமைதியை மட்டுமல்லாது பார்ப்பதற்கு கண்கவர் காட்சிகளையும் வழங்குகிறது.

இந்த மடாலயம் 17ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தவாங் மடாலயம் கால்டன் லாம்கே லட்சே என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் பொருள் ‘celestial paradise in a clear night’ - ஒரு தெளிவான இரவில் வான் சொர்க்கம் என்பதாகும்.

இந்த மடாலயத்தினை மெராக் லாமா லோட்ரே கியாட்சோ என்ற மத குரு நிறுவினார். இவர் ஐந்தாவது தலாய் லாமாவின் சீடராவார்.

திபெத்திய பௌத்த மதத்தின் கெலுபா சமூகத்துடைய அங்கமான இந்த மடாலயம், பௌத்த மதத்தவர்களிடையே பெரிதும் மத முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது ஒரு சாதாரண வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல், ஒரு கட்டிடக்கலை அற்புதமாகவும் உள்ளது.

ஒரு மிக நீண்ட மண்டபம் மற்றும் ஏராளமான புனித அறைகளை உள்ளடக்கிய இந்த மடாலயம், இந்திய மற்றும் திபெத்திய கட்டிடக்கலை பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு மிகப்பெரிய புத்தர் சிலை, நுணுக்கமான வேலைபாடுகளுடன் கூடிய தங்கா ஓவியங்கள், மற்றும் சுவர் சித்திரங்கள் இந்த மடாலயத்தின் அழகியலை கூட்டுகிறது

புத்த பிக்‌ஷுக்களுக்கும், பிற பக்தர்களுக்கும் ஒரு ஆன்மீக கூடாரமாக இருக்கிறது தவாங். இங்கு தோர்கியா மற்றும் லோசர் இங்கு கொண்டாடப்படும் பிரபலமான மற்றும் முக்கியமான பண்டிகையாகும்.

இந்த திருவிழாவின்போது, கலைஞர்கள் முகமூடிகள் அணிந்து சிறப்பு நடன நிகழ்ச்சியில் ஈடுபடுகிறார்கள். கண்கவர் ஆடைகளுடன் கூடிய இந்த நடனத்துடன், பாரம்பரிய சடங்குகள் நடைபெறும். இது அந்த இடத்தின், பௌத்த மதத்தினை குறித்தும் நாம் புரிந்துகொள்ள உதவுகிறது.

நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து அமைதியை நாட இந்த இடம் சிறந்த தேர்வாக இருக்கும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?